நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 
இந்தியா

கல்விதான் வளர்ச்சிக்கான வலுவான அடித்தளம்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

கல்விதான் வளர்ச்சிக்கான வலுவான அடித்தளம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திச் சேவை

கல்விதான் வளர்ச்சிக்கான வலுவான அடித்தளம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தின் மேற்கு கோதாவரி மாவட்டம், பெத்த மைனாவாணி லங்கா கிராமத்தில் உள்ள ஜில்லா பரிஷத் உயர்நிலைப் பள்ளிக்கு யூனியன் வங்கி உதவியுடன் ரூ.18 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்ட கணினிகள், அறிவியல் ஆய்வுக்கூடம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை அவர் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தார். அதன்பிறகு அப்பள்ளி மாணவர்களிடையே அவர் பேசியதாவது:

கல்விதான் வளர்ச்சிக்கான வலுவான அடித்தளமாகும். மாணவர்கள் அனைவரும் கற்றல், சுய முன்னேற்றம், படைப்பாற்றலுடன் கூடிய சிந்தனை ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

கல்விதான் தனிமனிதர்களுக்கும் சமூகங்களுக்கும் அதிகாரமளிக்கிறது. ஆந்திரத்தின் கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் நம்பிக்கையுடன் உயர்கல்வி பயில வேண்டும். கல்விக்கும், இந்தப் பிராந்தியத்தின் வளர்ச்சிக்கும் அரசு ஆதரவு அளிக்கும்.

மாணவர்களாகிய நீங்கள் அர்ப்பணிப்புடன் கல்வி கற்க வேண்டும். தேசத்துக்காகவும் இந்த மாநிலத்துக்காகவும் சேவையாற்ற நீங்கள் தயாராக வேண்டும்.

தத்தெடுக்கப்பட்ட கிராமங்களை வளர்ச்சியடையச் செய்ய வேண்டும் என்பது பிரதமரின் லட்சியக் கண்ணோட்டமாகும். கிராமங்களில் இயங்கும் பிரதமர் விஸ்வகர்மா திட்ட பயற்சி மையங்கள் மூலம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.

பெத்த மைனாவாணி லங்கா உள்ளிட்ட கிராமங்களுடன் எனக்கு நீண்டகாலத் தொடர்பு உள்ளது. இங்கு உள்ளூர் பெண்களின் வலுவான ஆதரவுடன் வளர்ச்சித் திட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இங்குள்ள கிராமங்கள் கோதாவரி நதிக்கு அருகில் இருந்தபோதிலும் நிலத்தடி நீர் உப்புத்தன்மையுடன் உள்ளது. இந்த கிராமங்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதற்கான கட்டமைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடலோரப் பகுதிகளில் கடல் அரிப்பைத் தடுக்க பல்வேறு நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பொங்கல் பண்டிகைக்குள் கடலோரப் பகுதிகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் முடிவடையும்.

மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பதற்காக படகுகளை வழங்குவது உள்ளிட்ட அரசு உதவிகள் அளிக்கப்படுகின்றன. நீடித்த கடலோர மற்றும் பிராந்திய வளர்ச்சிக்கு தீவிரமாக பங்களிக்க இளைஞர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

இளைஞர்களுக்கு ட்ரோன்கள், செயற்கை நுண்ணறிவு, 3டி அச்சடிப்பு, டிஜிட்டல் சந்தை ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்படுகிறது. "ட்ரோன் தீதி', "லாக்பதி தீதி' உள்ளிட்ட திட்டங்கள் மூலம் பெண்களுக்கு அதிகாரமளிக்கப்படுகிறது.

புயல் மற்றும் வெள்ள பாதிப்பு காலகட்டங்களில் மக்கள் தங்குமிடமாக பயன்படுத்துவதற்காக பல்நோக்கு கட்டடம் இந்த கிராமத்தில் கட்டப்பட்டுள்ளது. மற்ற காலகட்டங்களில் பிரதமர் விஸ்வகர்மா பயிற்சித் திட்டத்துக்கான மையமாக இக்கட்டடம் செயல்படும்.

பிரதமர் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு 13 வகையான தொழிற்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அவர்களுக்கு ஹைதராபாதிலும், ஸ்ரீசிட்டி நகரிலும் வேலைவாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சகல சௌபாக்கியத்தைத் தரும் வைகுண்ட ஏகாதசி விரதம்!

அனுகூலம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நுகா்வோா் உரிமைகள் விழிப்புணா்வு பேரணி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

திருமலையில் வைகுண்ட ஏகாதசியில் ஏஐ தொழில்நுட்பம்!

இளம் பெண் தற்கொலை: கோட்டாட்சியா் விசாரணை

SCROLL FOR NEXT