இந்தியாவில் சிறுபான்மையினர் குறிவைக்கப்படுகிறார்கள் என்ற பாகிஸ்தானின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்று மத்திய அரசு நிராகரித்துள்ளது.
இந்தியாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின்போது ஏற்பட்ட வன்முறைகளைச் சுட்டிக்காட்டியும் முஸ்லிம்களைக் குறிவைத்து அவர்களின் குடியிருப்புகள் தகர்க்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டி பாகிஸ்தான் வெளியுறவு செய்தித்தொடர்பாளர் தாஹிர் அந்த்ராபி மத்திய அரசு மீது கடுமையான விமர்சனங்களை சுமத்தியிருக்கிறார்.
இந்த நிலையில், இதற்கு பதிலளித்து, இது குறித்து திங்கள்கிழமை(டிச. 29) பேசிய வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால், ”பாகிஸ்தானில் வெவ்வேறு மத நம்பிக்கைகளைச் சார்ந்த சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டு வருவது நிரூபிக்கப்பட்ட உண்மை. அப்படிப்பட்டதொரு நாட்டிலிருந்து சுமத்தப்பட்டுள்ள மேற்குறிப்பிட்ட கருத்துகள் அடிப்படை ஆதாரமற்றவை” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.