கோப்புப் படம் 
இந்தியா

சுரங்கத்தில் ரயில்கள் மோதி விபத்து: 65 பேர் படுகாயம்

உத்தரகண்ட் மாநிலம் சமோலி சுரங்கத்தில் லோகோ ரயில், சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது குறித்து..

இணையதளச் செய்திப் பிரிவு

உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் சுரங்கத்தில் லோகோ ரயில், சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 65 பேர் படுகாயம் அடைந்தனர்.

உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் அருகேவுள்ள சமோலி மாவட்டத்தில் பிபில்கோட்டி நீர்மின் திட்ட சுரங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இத்திட்டம் அலகண்டா ஆற்றில் ஹெலங் மற்றும் பிபில்கோட் பகுதிகளுக்கு இடையே அமையவுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் 111 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

4.5 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த சுரங்கத்தில் நீர்மின் திட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு பணிமாறுதல்களுக்காக (ஷிப்ட் மாற்றம்) லோகோ ரயிலில் ஊழியர்கள் வெளியேறியுள்ளனர்.

எதிரே அதே வழித்தடத்தில் கட்டுமானப் பொருள்கள் எடுத்துச்செல்லப்பட்டதால், இரு ரயில்களும் மோதி விபத்து நேர்ந்துள்ளது. விபத்து நடந்தபோது ரயிலில் 109 பேர் இருந்துள்ளனர்.

இரவு 8.30 மணிக்கு நடந்த இந்த விபத்தில் 65 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 பேர் பலத்த காயங்களுடன் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 4 - 5 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

65 injured as loco trains collide inside Hydropower tunnel in Chamoli

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்ஜெட் விலையில் உயர்தர இசை... சோனி சவுண்ட்பார் அறிமுகம்!

திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு காங்கிரஸ் கண்டனம்! பிளவா?

கவினின் மாஸ்க் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ஆண்டின் நிறைவு நாளான இன்று!

நடங்கள், நடந்துகொண்டே இருங்கள்... 2026-ல் உடல்நலம் காக்க வேறென்ன செய்ய வேண்டும்?

SCROLL FOR NEXT