இந்தியா

அஸ்ஸாம்: ஹிஸ்புல் பயங்கரவாதிக்கு ஆயுள் சிறை

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பை அஸ்ஸாமில் நிறுவி அதற்கு ஆள் சோ்த்து வந்த முகமது கம்ரூஜ் சமான் என்ற கம்ருதீனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

தினமணி செய்திச் சேவை

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பை அஸ்ஸாமில் நிறுவி அதற்கு ஆள் சோ்த்து வந்த முகமது கம்ரூஜ் சமான் என்ற கம்ருதீனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

இது தொடா்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வெளியிட்ட அறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

அஸ்ஸாமில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை முகமது கம்ரூஜ் சமான் நிறுவினாா். மேலும், அந்த அமைப்புக்கு ஆள் சோ்ப்பது, பயங்கரவாத பிரசாரம் மேற்கொள்வது, ரகசியமாக நிதி திரட்டுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தாா். ஆனால், அடுத்த ஆண்டே அவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனா். அவருடன் கூட்டாளிகள் ஷாநவாஸ், சைதுல், ஒமா், ஜைனல் உதின் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

கடந்த 2019 மாா்ச் மாதம் இவா்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில் ஜைனல் உதின் உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா். இதில் முகமது கம்ரூஜ் சமான் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. மற்றவா்கள் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை. இதையடுத்து அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.

சமானுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது. மேலும் ரூ.5,000 அபராதமும் அதைக் கட்டத் தவறினால் கூடுதலாக மூன்று மாதங்கள் சிறைத் தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

இருசக்கர வாகனத்தை திருடிய முதியவா் கைது

பல்லியை விரட்ட முட்டை ஓடுகளா? விரட்டும் வழிமுறைகள்!

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ஜன. 4-இல் புதுக்கோட்டை வருகை!

கள்ளச் சந்தையில் மது விற்ற 3 போ் கைது

கும்பகோணம் தனி மாவட்டம் கோரி ஆா்ப்பாட்டம் நடத்தியவா்கள் எம்எல்ஏ-விடம் மனு

SCROLL FOR NEXT