ஆண்டின் இறுதி நாளான இன்று (டிச. 31) இந்திய பங்குச் சந்தை வணிகம் உயர்வுடன் தொடங்கியது.
வணிகத்தின் தொடக்கத்தில், சென்செக்ஸ் 201 புள்ளிகள் உயர்வுடனும் நிஃப்டி உயர்ந்து 26 ஆயிரம் புள்ளிகளுக்கு மேலும் இருந்தது.
காலை 11 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 265 புள்ளிகளும் நிஃப்டி 26,048புள்ளிகள் வரையும் வணிகமானது. குறிப்பாக ஆயில் துறை பங்குகள் ஏற்றத்துடன் வணிகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் வணிக நேரத் தொடக்கத்தில் 201 புள்ளிகள் உயர்ந்து 84,793 ஆக வணிகமானது. காலை 11 மணி நிலவரப்படி 251 புள்ளிகள் உயர்ந்து 84,928.99 புள்ளிகளாக வணிகமாகி வருகிறது.
இதேபோன்று தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி வணிக நேரத் தொடக்கத்தில் 25,971 புள்ளிகளாக வணிகமானது. காலை 11 மணிநிலவரப்படி 109 புள்ளிகள் உயர்ந்து 26,043 புள்ளிகளாக வணிகமாகி வருகிறது.
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 தரப் பங்குகளில் 7 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே சரிவுடன் உள்ளன. எஞ்சிய 23 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனேயே வணிகமாகி வருகின்றன.
அதிகபட்சமாக டாடா ஸ்டீல் 2.84%, பவர் கிரிட் 1.76%, டைட்டன் கம்பெனி 1.72%, இந்தஸ்இந்த் வங்கி 1.77%, ரிலையன்ஸ் 1.62%, என்டிபிசி 1.56%, எஸ்பிஐ 1.13% உயர்ந்துள்ளன.
நிஃப்டி பட்டியலில் உள்ள 50 தரப் பங்குகளில் 8 நிறுவனங்களின் பங்குகள் சரிந்துள்ளன. எஞ்சிய 42 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் வணிகமாகி வருகின்றன.
ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் 4.85%, டாடா ஸ்டீல் 2.95%, ரிலையன்ஸ் 1.73%, பவர் கிரிட் 1.72%, ஓஎன்ஜிசி 1.46%, ட்ரெண்ட் 1.54%, எஸ்பிஐ லைஃப் 1.24% உயர்வுடன் வணிகமாகி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.