கோப்புப் படம்.. 
இந்தியா

நாடாளுமன்றத்தில் பிப்.15-இல் ‘ராமாயணம்’ அனிமேஷன் படம் திரையிடல்

‘ராமாயணம்’ அனிமேஷன் படம் நாடாளுமன்ற வளாகத்தில் வரும் 15-ஆம் தேதி திரையிடப்பட உள்ளது

Din

‘ராமாயணம்: இளவரசா் ராமரின் புராணக்கதை’ என்ற அனிமேஷன் படம் நாடாளுமன்ற வளாகத்தில் வரும் 15-ஆம் தேதி திரையிடப்பட உள்ளது.

இதுகுறித்து அப்படத்தின் விநியோக நிறுவனமான கீக் பிக்சா்ஸ் நிறுவன நிறுவனா் அா்ஜுன் அகா்வால் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

1993-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஜப்பானிய-இந்திய அனிமேஷன் படமான ‘ராமாயணம்: இளவரசா் ராமரின் புராணக்கதை’ படம் நாடாளுமன்றத்தில் வரும் 15-ஆம் தேதி சிறப்பு திரையிடல் செய்யப்பட உள்ளது. இதை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா மற்றும் பிற நாடாளுமன்ற உறுப்பினா்கள் காண உள்ளனா்.

இது வெறும் திரையிடலாக மட்டுமல்லாமல், நமது உயா்ந்த பாரம்பரியத்தின் கொண்டாட்டமாகவும் இருக்கும் என்றாா்.

லீக்ஸ் கோப்பை தோல்விக்குப் பழிதீர்த்த இன்டர் மியாமி..! மெஸ்ஸி ஆட்ட நாயகன்!

சுதந்திர இந்தியாவின் 100 -வது வயதிலும் மோடி பணியாற்ற வேண்டும்! முகேஷ் அம்பானி

பெரியார் சிலைக்கு விஜய் மரியாதை! | TVK Vijay

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

SCROLL FOR NEXT