அயோத்தி கால்வாயில் இளம்பெண் சடலம்: 3 பேர் கைது
அயோத்தியில் இளம்பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அயோத்தியில் இளம்பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள பாழடைந்த கால்வாயிலிருந்து காயங்களுடன், ஆடைகள் இல்லாத நிலையில் 22 வயது தலித் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது மாநிலத்தில் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இளம் பெண் காணாமல் போனதாக பெற்றோா் தரப்பில் புகாா் அளிக்கப்பட்டிருந்த நிலையில், அவருடைய கிராமத்துக்கு அருகே உள்ள பாழடைந்த கால்வாயிலிருந்து அவருடைய உடல் மீட்கப்பட்டதாக போலீஸாா் தரப்பில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
‘எங்களது மகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறாா். அவருடைய உடலில் ஆழமான காயங்களும், எழும்பு முறிவும் ஏற்பட்டிருந்ததோடு, அவருடைய இரு கண்களும் பறிக்கப்பட்டிருக்கின்றன.
சிறைச்சாலையில் கோழிப்பண்ணை! கைதிகளுக்கு கோழிக்கறி! அரசுக்கு ரூ.10 கோடி மிச்சம்!!
இந்த விவகாரத்தில் போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை’ என்று அந்த இளம்பெண்ணின் பெற்றோா் புகாா் தெரிவித்தனா்.
இந்நிலையில், மாநிலத்தில் தலித் விரோத ஆட்சியை பாஜக நடத்தி வருகிறது என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.
மேலும அகிலேஷ் யாதவும் தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் இந்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், உ.பி.யின் மகளிர் ஆணைய உறுப்பினர் பிரியங்கா மௌரியா, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து, உரிய நீதி வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.