சிலிண்டர் விநியோகம் 
இந்தியா

பயனாளிகளின் உண்மைத் தன்மை: எண்ணெய் நிறுவனங்களுக்கு காலக்கெடு

பயனாளிகளின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

DIN

எண்ணெய் நிறுவனங்கள், எரிவாயு உருளை பெறும் பயனாளிகளின் உண்மைத் தன்மையை பயோ-மெட்ரிக் முறையில் உறுதி செய்வதற்கான பணியை மார்ச் மாதத்துக்குள் முடிக்க மத்திய அரசு கெடு விதித்துள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள், எரிவாயு உருளை வாங்கும் பயனாளிகளின் உண்மைத் தன்மையை கைவிரல் ரேகைப் பதிவு மற்றும் கருவிழிப் படலம் மூலம் உறுதி செய்து வருகிறது.

இப்பணி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய நிலையில், தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை வரும் மார்ச் மாதத்துக்குள் நிறைவு செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கெடுவிதித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

சமையல் எரிவாயு உருளை யார் பெயரில் இருக்கிறதோ அவர்கள், உரிய ஏஜென்ஸி அலுவலகத்துக்கு நேரில் சென்று பயோ-மெட்ரிக் பதிவு செய்து வருவது அவசியமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எரிவாயு உருளைக்கு மானியம் பெறும் அனைத்துப் பயனாளிகளுக்கும் பயோ-மெட்ரிக் மூலம் உறுதி செய்வது அவசியம். இதற்கான காலக்கெடு மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘பெண்களுக்கான ஒருக்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்’

சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பு: 6 போ் கைது

திருவள்ளூா்: வேப்பம்பட்டில் பிப். 8-இல் கம்மா சமூக ஒருங்கிணைப்பு மாநாடு

எல்&டி லாபம் 4 சதவீதம் சரிவு

தொண்டா்கள் விரும்பும் கட்சியுடன் தேமுதிக கூட்டணி அமைக்கும்

SCROLL FOR NEXT