இந்தியா

விமான நிலையக் காவல் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை!

மேற்கு வங்கத்தில் விமான நிலையத்தில் பணியில் இருந்த சிஐஎஸ்எஃப் கான்ஸ்டபிள் தூக்கிட்டு தற்கொலை

DIN

மேற்கு வங்கத்தில் விமான நிலையத்தில் பணியில் இருந்த சிஐஎஸ்எஃப் கான்ஸ்டபிள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தின் கொல்கத்தா நகரில் உள்ள சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையத்தில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) கான்ஸ்டபிள், சர்வதேச சரக்குப் பிரிவில் உள்ள கட்டடத்தில் காலை 10.40 மணியளவில் தூக்கிட்ட நிலையில் இருந்துள்ளார். இதனைக் கண்ட பிற அதிகாரிகள், அவரின் உடலை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். இருப்பினும், அவர் முன்னரே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

உயிரிழந்த கான்ஸ்டபிள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இதனிடையே, அவரின் உடலை உடற்கூறாய்வுக்காக காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலைக்கான காரணம் கண்டறியப்படவில்லை. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த கான்ஸ்டபிளின் தனிப்பட்ட வாழ்க்கையில் அல்லது தொழிலில் மன அழுத்தம் இருந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆக. 7-ல் தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!

பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு

டாடா பவர் லாபம் ரூ.1,262 கோடியாக அதிகரிப்பு!

தேசிய விருது பெற்ற ஜி.வி.பிரகாஷ்! தனுஷுக்கு நன்றி!

திண்டிவனம் - கடலூர் இடையே புதிய ரயில் வழித்தடம்: அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்!

SCROLL FOR NEXT