அகிலேஷ் யாதவ்  கோப்புப் படம்
இந்தியா

தேர்தலில் பாஜகவுக்காக போலி வாக்களிக்கும் அதிகாரிகள்! அகிலேஷ் வெளியிட்ட ஆதாரம்

மில்கிபூர் இடைத்தேர்தலில் பாஜவுக்காக இலக்கு நிர்ணயித்து போலி வாக்களிப்பதாக அதிகாரிகள் மீது அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு.

DIN

உத்தரப் பிரதேச மாநிலம் மில்கிபூர் இடைத்தேர்தலில் ஆளும் பாஜவுக்காக இலக்கு நிர்ணயித்து போலி வாக்களிப்பதாக தேர்தல் அதிகாரிகள் மீது சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கான ஆதாரமாக ஆடியோ ஒன்றையும் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அகிலேஷ் பகிர்ந்துள்ளார். இத்தகைய அதிகாரிகளால் நடத்தப்படும் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும், ஆடியோ ஆதாரத்தின் அடிப்படையில் அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய வேண்டும் எனவும் அகிலேஷ் கோரியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்திக்குட்பட்ட மில்கிபூர் தொகுதிக்கு இன்று (பிப். 5) இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மில்கிபூர் இடைத்தேர்தலில் போலி வாக்குகளுக்கு துணைபோவது குறித்து அதிகாரிகள் பேசிக்கொண்ட ஆடியோவை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அகிலேஷ் யாதவ் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

ஆளும் கட்சிக்கு போலி வாக்குப்பதிவு என்ற இலக்கை நிறைவேற்றும் தலைமை அதிகாரிகளின் பின்னணியில் உள்ள உண்மையை அம்பலப்படுத்துவதற்கான ஒரு ஸ்டிங் ஆபரேஷன் இது.

அவர்களின் வாக்குச்சாவடிகளில் உடனடியாகத் தேர்தல் ரத்து செய்யப்பட வேண்டும். மேலும் ஆடியோ ஆதாரங்களின் அடிப்படையில் இந்த விவகாரம் குறித்து பரிசீலனை செய்து தொடர்புடைய அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய வேண்டும். பின்னர் நீதித்துறை நடவடிக்கைகளுக்குப் பிறகு பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

தேர்தல் மோசடி மற்றும் அதிகாரிகளின் சூழ்ச்சிகள் தொடர்பான இதுபோன்ற விடியோ, ஆடியோ ஆதாரங்கள் மேலும் வெளியாகி வருகின்றன.

தேர்தலில் அதிகாரிகளைப் பயன்படுத்திக்கொண்ட பிறகு அரசாங்கம் அவர்களை கைகழுவிவிடும். பின்னர், அவர்கள் தங்கள் குடும்பம் மற்றும் சமூகத்தின் முன்பு இதர வாழ்கையை சிறையில் கழிக்க நேரிடும்.

ஜனநாயகத்தின் இத்தகைய எதிரிகளை உச்ச நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் உடனடியாகக் கண்டிக்க வேண்டும்.

பாஜக அலுவலகம் வழங்கிய போலி வாக்களிப்பு இலக்கை ஏற்க மறுத்த அனைத்து நேர்மையான மற்றும் உண்மையுள்ள அதிகாரிகளையும் நாங்கள் பாராட்டுகிறோம் எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க | உணவு டெலிவரி போல இனி கார் டெலிவரி! விரைவில் அறிமுகம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பரிசுத்தம்... அவந்திகா மிஸ்ரா!

வசியக்காரி... சோனம் பஜ்வா!

பைக்கிலிருந்து தவறி விழுந்த நிலத்தரகா் உயரிழப்பு

அரக்கோணம் ஸ்ரீசுந்தர விநாயகா் கோயிலில் செப். 7-இல் பாலாலயம்

பேருந்தில் ஆவணமின்றி கொண்டு வந்த ரூ. 59 லட்சம், 4 வெள்ளிக் கட்டிகள் பறிமுதல்

SCROLL FOR NEXT