பிரதமர் நரேந்திர மோடி கோப்புப் படம்
இந்தியா

இந்தியர்களுக்கு அநீதி இழைக்கும் அமெரிக்கா; பிரதமர் மோடி மௌனம்! காங்கிரஸ் குற்றச்சாடு

அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்ட இந்தியர்களின் கைகள் கட்டப்பட்டதற்கு காங்கிரஸ் கண்டனம்

DIN

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களை அமெரிக்கா நாடு கடத்தியது.

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களை நாடு கடத்தும் பணியில் அமெரிக்க அரசு ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், நாடு கடத்தப்படும் இந்தியர்களுடன் அமெரிக்க சி-17 விமானம் செவ்வாய்க்கிழமையில் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு, இன்று இந்தியாவில் பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் விமான நிலையத்தை அடைந்தது. பஞ்சாபில் இருந்து அந்தந்த மாநிலங்களுக்கு இந்தியர்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

இந்த நிலையில், விமானத்தில் இந்தியர்களின் கைகளை விலங்கால் கட்டி, அழைத்து வரப்பட்டது போன்ற புகைப்படங்கள் வெளியானதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்தது. இந்தியர்களுக்கு நேர்ந்த அநீதி குறித்து எதுவும் பேசாமல் பிரதமர் நரேந்திர மோடி மௌனம் சாதிப்பதாக காங்கிரஸார் கூறினர்.

அமெரிக்காவில் பெரியளவிலான நாடு கடத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அதிபர் தேர்தலின்போதே டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். இந்த நிலையில், கடந்த மாதம் அதிபரானவுடன், அதற்கான நடவடிக்கையில் அதிபர் டிரம்ப்பின் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களையும் நாடு கடத்தும் பணியை அமெரிக்கா மேற்கொண்டது.

இதனிடையே, சட்டவிரோதமாகக் குடியேறிய 205 இந்தியர்களை ராணுவ விமானம் மூலம் அமெரிக்க அரசு இந்தியாவுக்கு அனுப்பியது. அமெரிக்காவில் குடிவரவுத் துறைதான் நாடு கடத்தல் பணியை மேற்கொள்ளும். ஆனால், தற்போதைய டிரம்ப்பின் ராணுவத்தின் மூலமாக, சி-17 ராணுவ விமானம் மூலம் சட்டவிரோதக் குடியாளர்களை அனுப்பி வைக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அவசர ஊா்தி ஊழியா்களுக்கு பாதுகாப்பு: டிஜிபி அறிவுறுத்தலைப் பின்பற்ற உத்தரவு

காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனங்கள் மோதல்: இரு இளைஞா்கள் மரணம்

வேன் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

வாகனம் மோதியதில் பள்ளி மாணவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT