கோபால் ராய் 
இந்தியா

ஆம் ஆத்மி 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும்: கோபால் ராய்

ஆம் ஆத்மி 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என எதிர்பார்ப்பு..

DIN

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு ஒருநாளே உள்ள நிலையில். ஆம் ஆத்மி கட்சி 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கோபால் ராய் தெரிவித்தார்.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், சனிக்கிழமை காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ளது. வெற்றிபெற வாய்ப்புள்ள ஆம் ஆத்மி வேட்பாளர்கள் சிலரை பாஜகவினர் தொலைபேசியில் அழைத்து, தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்னதாகவே கட்சி மாறினால் ரூ. 15 கோடி அளிப்பதாகப் பேரம் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியினர் எழுப்பிய இந்த குற்றச்சாட்டை விசாரிக்க தில்லி தலைமைச் செயலாளருக்கு துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், இதுதொடர்பாக கோபால் ராய் கூறுகையில்,

தில்லி மக்கள் ஆம் ஆத்மிக்கு தங்கள் ஆணையை வழங்கியுள்ளனர். எனவே ஆம் ஆத்மி அரசு ஆட்சி அமைக்க உள்ளனர். கட்சி வேட்பாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆம் ஆத்மி வெற்றிபெறும்.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை வைத்து பாஜக ஒரு உளவியல் கதையை உருவாக்குவதாகவும், ஆம் ஆத்மி வேட்பாளர்களைப் பணம் கொடுத்து தன்வசம் இழுப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் தொல்லை: வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை

நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியா் தகவல்

லக்ஷயா ஏமாற்றம்; சாத்விக்/சிராக் ஏற்றம்

31-ஆவது நாளாக போக்குவரத்து ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

இறுதிச்சுற்றில் நீரஜ் சோப்ரா, சச்சின் யாதவ்

SCROLL FOR NEXT