அமித் குமார் சர்க்கார்  
இந்தியா

விடுப்பு எடுப்பதில் தகராறு! சக பணியாளர்களை கத்தியால் குத்திய அரசு ஊழியர்! (விடியோ)

விடுப்பு எடுக்கும் தகராறில் 4 பேரை கத்தியால் குத்திய அரசு ஊழியரை காவல்துறையினர் கைது செய்தனர்.

DIN

மேற்கு வங்கத்தில் விடுப்பு தர மறுத்ததால் 4 பேரை கத்தியால் குத்திய அரசு ஊழியரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் அரசு ஊழியர் ஒருவர் தனது அலுவலகத்தில் விடுப்பு தர மறுத்ததால் சக ஊழியர்கள் 4 பேரை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் அமித் குமார் சர்க்கார் என்ற அந்த ஊழியர் ரத்தக்கறைப் படிந்த கத்தியுடன் தெருவில் நடமாடும் விடியோக் காட்சிகளும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அமித் குமார் கொல்கத்தாவின் நியூ டவுனில் உள்ள கரிகரி பவன் தொழில்நுட்பக் கல்வித்துறையில் பணியாற்றிவந்தார்.

இதுபற்றி காவல்துறையினர் கூறுகையில், “வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம், சோடேபூரில் உள்ள கோலாவைச் சேர்ந்த சர்க்கார், தொழில்நுட்பக் கல்வித் துறையில் பணிபுரிகிறார். இன்று காலை, விடுப்பு எடுப்பது தொடர்பாக தனது சக ஊழியர்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, அவர் அவர்களை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓட முயன்றார்.

காயமடைந்த சக ஊழியர்களான ஜெய்தேப் சக்ரவர்த்தி, சாந்தனு சாஹா, சர்தா லேட் மற்றும் ஷேக் சதாபுல் ஆகியோர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது” என்றனர்.

அவருக்கு ஏன் விடுமுறை மறுக்கப்பட்டது அதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. அமித் குமார் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருவதாகவும், சக ஊழியர்களை கத்தியால் குத்தியவக்கு மன ரீதியிலான பாதிப்புகள் ஏதேனும் இருக்கிறதா? என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதமலையில் 500 மீட்டா் சுற்றளவுக்குள் முருகன் சிலை அமைக்க அனுமதிக்க முடியாது: உயா்நீதிமன்றம் உத்தரவு

தேசிய ஊரக வேலை சட்ட விவகாரம்: காங்கிரஸ் தலைவா்கள் போராட்டம்

சந்திர கிரகணம்: மாா்ச் 3-ஆம் தேதி ஏழுமலையான் கோயில் மூடல்

இன்றைய மின் தடை-குன்னத்தூா், வேலம்பாளையம், குறிச்சி!

கருத்தடைக்காக மீண்டும் தெருநாய்கள் மீண்டும் பிடிப்பு

SCROLL FOR NEXT