தில்லி தேர்தல் 
இந்தியா

ஆம் ஆத்மி தோல்வி: தில்லி தலைமைச் செயலகத்துக்கு சீல்!

ஆம் ஆத்மி தோல்வியடைந்த நிலையில் தில்லி தலைமைச் செயலகத்துக்கு சீல் வைப்பு

DIN

புது தில்லி: புது தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வியடைந்த நிலையில், ஆவணங்களைப் பாதுகாக்கும் வகையில், தில்லி தலைமைச் செயலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

தில்லி துணைநிலை ஆளுநர் பிறப்பித்த உத்தரவுக்கு இணங்க, தலைமைச் செயலகம் பூட்டி, பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. யாரும் உள்ளே நுழைய முடியாத வகையில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தில்லி தலைமைச் செயலகத்தில் உள்ள முக்கிய ஆவணங்கள் மற்றும் கணினி ஹார்டுவேர்களை பாதுகாக்கும் வகையில், துணைநிலை ஆளுநரின் உத்தரவைத் தொடர்ந்து பொது நிர்வாகத் துறையின் அனுமதியின்றி, யாரும் தலைமைச் செயலகத்துக்குள் நுழைய முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதன் வெற்றி உறுதி செய்யப்பட்ட நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக தொண்டர்கள் காத்திருக்கிறார்கள்.

ஆளும் ஆம் ஆத்மி மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. முதல்வர் அதிஷி வெற்றி பெற்றிருந்தாலும், முன்னாள் முதல்வர் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உடல் எடை குறைய...

புள்ளிகள்

புதிய நிலா!

வீட்டுக் குறிப்புகள்...

மிகச் சிறிய ரயில் நிலையம்

SCROLL FOR NEXT