பஜன்லால் சர்மா, மோகன் யாதவ். 
இந்தியா

மகா கும்பமேளா: ராஜஸ்தான், மத்தியப் பிரதேச முதல்வர்கள் புனித நீராடல்

பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா, மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் ஆகியோர் சனிக்கிழமை திரிவேணி சங்கமத்தில் நீராடினர்.

DIN

பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா, மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் ஆகியோர் சனிக்கிழமை திரிவேணி சங்கமத்தில் நீராடினர்.

அப்போது மகா கும்பமேளா ஏற்பாடுகளுக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு ராஜஸ்தான் முதல்வர் நன்றி தெரிவித்தார். உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகியவை கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தந்து, புனித நீராடி வருகின்றனர். மகா கும்பமேளா பிப்ரவரி 26 அன்று முடிவடைகிறது.

மகர சங்கராந்தி, மௌனி அமாவாசை, பசந்த் பஞ்சமி ஆகிய மூன்று புனித அமிர்த ஸ்நான விழாக்கள் முடிவடைந்த நிலையிலும், இந்தியா மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து பக்தர்கள் புனித நீராடுவதற்காகத் தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் வருகிறார்கள்.

2-வது ஒருநாள் போட்டிக்காக கட்டாக் வந்தடைந்த இந்திய அணி!

பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநிலங்களவை எம்.பி. சுதா மூர்த்தி மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நீராடினர்.

மேலும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புனித நீராட வருகை தர உள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

வைல்ட் ஃபிளவர்... அமைரா தஸ்தூர்!

நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: தமிழிசை

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா: புனித நீராட குவிந்த மக்கள்!

SCROLL FOR NEXT