இந்தியா

உ.பி. இடைத்தேர்தலில் வெற்றியை உறுதிசெய்த பாஜக!

உத்தரப் பிரதேசத்தில் மில்கிபூர் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார்.

DIN

உத்தரப் பிரதேசத்தில் மில்கிபூர் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார்.

தில்லி பேரவைத் தேர்தல், தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலுடன் உத்தரப் பிரதேசத்தில் மில்கிபூர் பேரவைத் தொகுதிக்கும் கடந்த பிப். 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று(சனிக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மில்கிபூர் பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளரே முன்னிலை பெற்று வருகிறார்.

மொத்தம் 30 சுற்றுகளில் 26 ஆவது சுற்று முடிவில் பாஜக வேட்பாளர் சந்திரபானு பஸ்வான் 1,30,901 வாக்குகள் பெற்றுள்ளார்.

சமாஜவாதி வேட்பாளர் அஜித் பிரசாத் 76,082 வாக்குகள் பெற்று 2 ஆம் இடத்தில் உள்ளார்.

பாஜக வேட்பாளர் 59,084 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பதால் அவரது வெற்றி உறுதியாகிறது. தில்லி தேர்தலுடன் உ.பி. இடைதேர்தலிலும் பாஜக வெற்றியையடுத்து கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மில்கிபூர் தொகுதி, அயோத்தி மாவட்டத்தில் உள்ள தொகுதியாகும். கடந்த 2022 பேரவைத் தேர்தலில் அயோத்தி மாவட்டத்தில் பாஜக இழந்த ஒரே தொகுதி இதுவாகும். தற்போது இடைத்தேர்தல் மூலமாக அந்த தொகுதியையும் பாஜக கைப்பற்றுகிறது.

கடந்த பேரவைத் தேர்தலில் சமாஜவாதியின் அவதேஷ் பிரசாத், மில்கிபூர் தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார். பின்னர் 2024 மக்களவைத் தேர்தலில் பைசாபாத் எம்.பி.யாக தேர்வான நிலையில் எம்எல்ஏ பதவியை அவர் ராஜிநாமா செய்ததால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேனியில் செப்.19-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

மதுப் புட்டிகளை பதுக்கிய முதியவா் கைது

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் நாளை மின்தடை

இந்தியா்களுக்கு ஏமாற்றம்

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் மாணவா்களுக்கு காய்ச்சல்

SCROLL FOR NEXT