குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் 
இந்தியா

நாட்டின் வளா்ச்சிப் பயணத்தில் விவசாயிகளின் பங்கு அளப்பரியது: ஜகதீப் தன்கா்

வளர்ச்சியை நோக்கிய பயணத்தில் விவசாயிகளின் பங்கு அளப்பரியது என்றும் வேளாண் அறிவியல் மையங்களை விவசாயிகள் பயன்படுத்திப் பலன் அடைய வேண்டும்

DIN

ஜெய்பூா்: வளர்ச்சியை நோக்கிய பயணத்தில் விவசாயிகளின் பங்கு அளப்பரியது என்றும் வேளாண் அறிவியல் மையங்களை விவசாயிகள் பயன்படுத்திப் பலன் அடைய வேண்டும் என குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநிலம், சித்தோா்கரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மேவாா் பிராந்திய ஜாட் மகாசபை கூட்டத்தில் ஜகதீப் தன்கா் பங்கேற்று பேசியதாவது:

விவசாயிகள் உணவு உற்பத்தி செய்து வழங்குபவர்கள் என்றும், அவர்கள் உதவிக்காக யாரையும் எதிா்பாா்த்தோ, சாா்ந்தோ இருக்கக் கூடாது.

என்ன நடந்தாலும், எத்தனை தடைகள் எழுந்தாலும் இந்தியாவின் வளா்ச்சிப் பயணத்தில் விவசாயிகளின் பங்களிப்பை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது எனவும் அது அளப்பரியது என்று கூறினார்.

விவசாயிகளின் பொருளாதார நிலை உயரும்போது, நாட்டின் பொருளாதார நிலையும் உயரும். அனைத்துக்கும் மேலாக விவசாயிகள் வலுவான கரங்களுக்கு சொந்தக்காரர்கள். அவர்கள் தங்கள் வலுவான செயல்பாடுகளால், அரசியல் வலிமையையும் பொருளாதார திறனையும் கொண்டுள்ளனர் என அவர் தெரிவித்தார்.

நாட்டில் தற்போதுள்ள ஆட்சி, விவசாயிகளுக்கு தலைவணங்குகிறது, அவர்களுக்கு ஆதரவாக உள்ளது. நாடு முழுவதும் விவசாயிகளுக்கு உதவ 730-க்கும் மேற்பட்ட வேளாண் அறிவியல் மையங்கள் உள்ளன. இந்த வேளாண் அறிவியல் மையங்களின் சேவையை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். புதிய தொழில்நுட்பங்கள், அரசின் வேளாண் கூட்டுறவுச் சங்கங்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்தும் விவசாயிகள் நன்கு அறிந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

வேளாண் உற்பத்தி என்பது உலகின் மிகப்பெரிய, மிகவும் மதிப்புமிக்க வர்த்தகமாகும். நமது திறமையான இளைஞர்கள், வேளாண் சார்ந்த வர்த்தகத்தில் அதிக அளவில் ஈடுபட வேண்டும் என்றாா் தன்கா்.

மேலும் 25 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஜாட் இடஒதுக்கீடு இயக்கத்தை நினைவு கூர்ந்த அவர், நான் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கு வந்துள்ளேன், சமூக நீதிக்கான போராட்டத்தில் ஜாட்டுகளும் வேறு சில சாதியினரும் இடஒதுக்கீடு பெற்றனர். அந்த முயற்சியின் பலன்களை இப்போது நாட்டிலும் ராஜஸ்தான் மாநிலத்தின் நிர்வாக சேவைகளிலும் காண முடிகிறது என அவர் கூறினார்.

சமூக நீதியின் அடிப்படையில், இடஒதுக்கீட்டின் அடிப்படையில், பயனடைந்தவர்கள் இப்போது அரசின் முக்கிய பதவிகளில் உள்ளனர். அவர்களுக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால் அந்த சமூகத்தின் ஆதரவும் முயற்சிகளும் தான் நமக்கு சமூக நீதியை அளித்தன என்பதை ஒருபோதும் மறக்க கூடாது எனவும் சமூக நீதிக்கான நமது இயக்கம் உலகின் மிகப்பெரிய உதாரணம் என அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

SCROLL FOR NEXT