செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடியையும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸையும் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் வரவேற்றார்.
இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் இமானுவேல் மேக்ரான் பதிவிட்டுள்ளதாவது,
எனது நண்பர் பிரதமர் நரேந்திர மோடியை பாரீஸ் நகரத்துக்கு வரவேற்கிறேன். அன்புள்ள ஜே.டி. வான்ஸை சந்திப்பதில் மகிழ்ச்சி. ஏஐ உச்சி மாநாட்டிற்கு எங்கள் அனைத்து நட்பு நாடுகளையும் வரவேற்கிறோம் எனப் பதிவிட்டுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நடவடிக்கைகள் சாா்ந்த சா்வதேச மாநாடு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் தொடங்கவுள்ளது. இதற்கு இமானுவல் மேக்ரானும் பிரதமா் மோடியும் தலைமை வகிக்கின்றனா்.
இதில் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள், செயற்கை நுண்ணறிவு, பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாரீஸ் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இமானுவல் மேக்ரானை சந்தித்தது குறித்து, எனது நண்பர் அதிபர் மேக்ரானை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி எனப் பதிவிட்டிருந்தார்.
பிரான்ஸ் பயணத்தை புதன்கிழமை முடித்துக்கொண்டு அமெரிக்காவுக்கு பிரதமா் மோடி புறப்படுகிறாா். அங்கு அதிபா் டொனால்ட் டிரம்பை சந்தித்து இந்தியா- அமெரிக்கா இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.
இதையும் படிக்க | ஹசீனா மகனைக் கொல்ல முயன்ற வழக்கு: வங்கதேச நாளிதழ் ஆசிரியா் விடுவிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.