கோப்புப் படம் 
இந்தியா

விலைவாசி உயர்வு, மணிப்பூர் விவகாரம்: மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் நோட்டீஸ்!

விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடத்தக் கோரி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கினார்.

DIN

விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடத்தக் கோரி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் இன்று(செவ்வாய்க்கிழமை) மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜன. 31 ஆம் தேதி குடியரசுத்தலைவர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நாட்டில் அத்தியாவசியப் பொருள்கள் குறிப்பாக பால், காய்கறிகள், சமையல் எண்ணெய்கள் மற்றும் அன்றாடம் பயன்படுத்தும் பிற பொருள்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்களைப் பாதிப்பதாகக் கூறி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் மக்களவையில் நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

2025 பட்ஜெட்டில் கொள்கை விவாதங்கள் இருந்தபோதிலும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவோ நடுத்தர, தொழிலாள வர்க்கக் குடும்பங்களை ஆதரிக்கவோ அரசாங்கம் எந்த உறுதியான நடவடிக்கைகளையும் செயல்படுத்தவில்லை என்றும் அவர் தனது நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல மணிப்பூர் கலவரம் மற்றும் அந்த மாநிலத்தில் தற்போதைய நிலை குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சௌத்ரி, மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கினார்.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பிரேன் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இரண்டு ஆண்டுகளாக வன்முறை நீடிக்கும் மாநிலத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க வேண்டும் என்று அவர் தனது நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மழை...மழை... சாந்தினி பகவானனி !

கூந்தல் நெளிவில்... சஹானா கௌடா

கொச்சி: பஹல்காம் தாக்குதலில் பலியானவரின் குடும்பத்தினரைச் சந்தித்த அமித் ஷா

ஜார்க்கண்டில் 51 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை! முதல்வர் ஒப்புதல்!

திமுகவை அகற்றுங்கள்; தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி:அமித் ஷா! செய்திகள்:சில வரிகளில் | 22.8.25 | BJP

SCROLL FOR NEXT