முகப்பு
இந்தியா

ரிஷப் பந்த் உயிரைக் காப்பாற்றிய இளைஞர் காதலியுடன் தற்கொலை முயற்சி!

கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்தின் உயிரைக் காப்பாற்றிய இளைஞர் காதல் விவகாரத்தில் விஷம் குடித்து தற்கொலை

Updated On : 12 பிப்ரவரி, 2025 at 12:54 PM
ரிஷப் பந்த் / ரஜத் குமார்
பகிர்:

கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்தின் உயிரைக் காப்பாற்றிய இளைஞர், தனது காதலியுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் காதலி உயிரிழந்த நிலையில், இளைஞர் உயிருக்குப் போராடி வருகிறார்.

கடந்த 2022ஆம் ஆண்டு உத்தரகண்ட் மாநிலம் ரூர்கி பகுதியில் ரிஷப் பந்த்தின் கார் வேகமாகச் சென்று நெடுஞ்சாலை தடுப்பு சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் தீப்பிடித்து எரிவதற்குள், படுகாயங்களுடன் மயங்கியிருந்த ரிஷப் பந்த்தை ரஜத் குமார், தனது நண்பர் நிஷு குமாருடன் சேர்ந்து மீட்டு காப்பாற்றினார்.

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபார்பூர் மாவட்டத்திற்குட்பட்ட புர்காஜி பகுதியைச் சேர்ந்த ரஜத் (25), மனு என்ற 21 வயதுடைய பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

Advertisement

இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்கள் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் இருவரும் தொலைபேசியில் மட்டுமே பேசிவந்துள்ளனர். இதனிடையே அப்பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய அவர்கள் குடும்பத்தினர் முயற்சித்துள்ளனர். இதேபோன்று ரஜத் குடும்பத்தினருடம் வேறு பெண்ணுடன் திருமணத்து ஏற்பாடு செய்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த காதலர்கள், வயலில் தனியாகச் சந்தித்து விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் தகவல் அறிந்து வந்த குடும்பத்தினர் இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதில் அப்பெண் உயிரிழந்துள்ளார்.

தற்போது ரஜத் மட்டும் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்குப் போராடி வருகிறார். இதனிடையே, தனது பெண்ணை தனியாக அழைத்துச் சென்று கொலை செய்துவிட்டதாக ரஜத் மீது பெண்ணின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ரஜத் சுய நினைவுக்குத் திரும்பிய பிறகு அவரிடம் விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிஷப் பந்த்தின் உயிரைக் காப்பாற்றியதன் நன்றிக்கடனாக, தான் குணமடைந்து விளையாடச் செல்வதற்கு முன்பு, ரஜத்துக்கு இருசக்கர வாகனத்தை பந்த் பரிசாக அளித்திருந்தார்.

இதையும் படிக்க | பெண்களுக்கு வீட்டிலிருந்து வேலை: ஆந்திர ஐடி கொள்கையில் மாற்றம்!

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.