இந்தியா

ஏக்நாத் ஷிண்டேவை பாராட்டிய சரத் பவாருக்கு சிவசேனா எதிர்ப்பு!

ஏக்நாத் ஷிண்டேவை பாராட்டியிருக்கக் கூடாது.. சிவசேனா சொல்வதென்ன..

DIN

தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை பாராட்டியதற்கு சிவசேனா புதன்கிழமை கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதுதொடர்பாக செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத் கூறியது,

அமித் ஷாவின் உதவியுடன் சிவசேனாவை பிளவுபடுத்தியது ஷிண்டே தான், அவரைப் பாராட்டுவது பாஜக தலைவரை கௌரவிப்பதற்கு ஒப்பானது.

98-வது அகில பாரதிய மராத்தி சாகித்ய சம்மேளனத்தின்போது, ​​ஏக்நாத் ஷிண்டே தில்லியில் சரத் பவாரிடம் இருந்து மகாத்ஜி ஷிண்டே ராஷ்ட்ரீய கௌரவ் புரஸ்கார் விருதைப் பெற்றார். அடுத்த வாரம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள இலக்கியக் கூட்டத்தின் வரவேற்புக் குழுவிற்கு பவார் தலைமை தாங்குகிறார்.

2022ஆம் ஆண்டு மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா-என்சிபி ஆட்சியைக் கவிழ்த்ததால், சரத் பவார் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளக்கூடாது என்று சஞ்சய் ராவுத் கூறினார்.

அரசியலில் சில விஷயங்களைத் தவிர்க்க வேண்டும். மகாராஷ்டிரத்தின் எதிரியாக நாங்கள் கருதும் ஒருவருக்கு இதுபோன்ற மரியாதை வழங்குவது மகாராஷ்டிராவின் பெருமைக்கு ஒரு அதிர்ச்சி. பவார் வித்தியாசமாக நினைத்திருக்க வேண்டும், ஆனால் அத்தகைய அரசியல் மகாராஷ்டிர மக்களுக்குப் பிடிக்கவில்லை.

நீங்கள் (சரத் பவார்) ஒரு மூத்த அரசியல்வாதி, நாங்கள் உங்களை மதிக்கிறோம். ஆனால், அமித் ஷாவின் உதவியுடன் பாலாசாகேப் தாக்கரேவின் சிவசேனாவைப் பிரித்து மகாராஷ்டிராவைப் பலவீனப்படுத்தியவர்கள், நீங்கள் அத்தகைய மக்களை மதிக்கிறீர்கள். இது மராத்திய மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: பவாரியா கொள்ளையர்கள் 3 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு

6 ஓவர்களில் 5 விக்கெட்டுகள்; பென் ஸ்டோக்ஸ் அபார பந்துவீச்சு!

மணிப்பூரில் தொடரும் டெங்கு பரவல்! 5,166 பாதிப்புகள் உறுதி!

ஜார்க்கண்டில் பாம்பு விஷம் கடத்திய கும்பல் பிடிபட்டது: ரூ.80 கோடி விஷம் பறிமுதல்

SCROLL FOR NEXT