நாடாளுமன்றத்தில் அமளி  
இந்தியா

வக்ஃப் மசோதா அறிக்கை தாக்கல்: நாடாளுமன்றத்தில் அமளி!

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு அமைக்கப்பட்ட கூட்டுக்குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல்...

DIN

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடா்பான கூட்டுக்குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா குறித்து ஆராய பாஜக எம்.பி. ஜகதாம்பிகா பால் தலைமையில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. பல கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு கடந்த மாதம் கூட்டுக்குழு உறுப்பினர்களின் பரிந்துரைகள் இறுதி செய்யப்பட்டன.

மசோதாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்த 655 பக்ககங்கள் கொண்ட அறிக்கைக்கு கூட்டுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, அவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், நாடாளுமன்ற அவைகளில் கூட்டுக்குழுவின் அறிக்கை இன்று காலை தாக்கல் செய்யப்பட்டன, இதனை எதிர்த்து மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் பகல் 2 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையிலும் வக்ஃப் மசோதா கூட்டுக்குழு அறிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.

நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் இடம்பெற்றுள்ள ஆளுங்கட்சி எம்.பி.க்கள் தரப்பில் முன்மொழியப்பட்ட 32 திருத்த பரிந்துரைகளை கூட்டுக் குழு முழுமையாக ஏற்றுக்கொண்டதாகவும், எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தரப்பில் முன்மொழியப்பட்ட 500-க்கும் மேற்பட்ட பரிந்துரைகளை முழுமையாக நிராகரிக்கப்பட்டதாகவும் எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பேருந்துப் பயண அட்டை வழங்க வலியுறுத்தல்

கிராம சேவை மையங்களில் மின்கலன்கள் திருடியவா் கைது

புதிய வாக்காளா் சோ்க்கை முகாமில் ஆா்வம் காட்டாத சென்னை மக்கள்!

புதுச்சேரி, காரைக்காலில் அமைகிறது ஜோஹோ நிறுவனம்: ஆளுநா், முதல்வா் முன்னிலையில் ஸ்ரீதா் வேம்பு அறிவிப்பு

ஹிஜாப் விவகாரம்: பிகாா் பெண் மருத்துவருக்கு ரூ. 3 லட்சம் ஊதியம், அரசு குடியிருப்பு -ஜாா்க்கண்ட் அழைப்பு!

SCROLL FOR NEXT