கோப்புப்படம்.  
இந்தியா

மகாராஷ்டிரத்தில் மேலும் 2 பேருக்கு ஜிபிஎஸ்: மொத்த பாதிப்பு 205!

மகாராஷ்டிரத்தில் ஜிபிஎஸ் பாதிப்பு கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 205-ஐ எட்டியுள்ளது.

DIN

மகாராஷ்டிரத்தில் ஜிபிஎஸ் பாதிப்பு கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 205-ஐ எட்டியுள்ளது.

இதுகுறித்து அம்மாநில சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மகாராஷ்டிரத்தில் மேலும 2 பேருக்கு ஜிபிஎஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 205 ஐ எட்டியுள்ளது.

தற்போது இந்த தொற்று பாதிக்கப்பட்டு 177 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அதில் 20 பேர் வென்டிலேட்டர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் இந்நோய்க்கு இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர். மாநிலத்தின் பெரும்பாலான பாதிப்புகள் புணேவில் இருந்து கண்டறியப்பட்டுள்ளன என்றார்.

150 பெண்கள் பாலியல் வன்கொடுமை, 3,000 பேர் பலி! என்ன நடக்கிறது காங்கோவில்?

பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகள் காரணமாக உடலில் உருவாகும் ஜிபிஎஸ் பாதிப்பு பல காலமாக சமூகத்தில் இருந்தாலும், அண்மையில் மகாராஷ்டிர மாநிலம் புணேவிலும், மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவிலும் அந்தப் பாதிப்பு தீவிரமாக பரவிவருகிறது.

பால் மற்றும் இறைச்சியை முறையாக கொதிக்க வைத்து சமைக்காவிடில் அதிலிருந்து கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) நோயைப் பரப்பும் பாக்டீரியா உருவாகலாம் என மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா்.

கடந்த சில நாள்களுக்கு முன்பாக திருவள்ளூரைச் சோ்ந்த 9 வயது சிறுவன் ஜிபிஎஸ் பாதிப்பால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடுதல் வரிகளை நீக்கினால் நாட்டுக்கு பேரழிவு: நீதிமன்ற தீர்ப்பு குறித்து டிரம்ப்

ஜம்மு - காஷ்மீரைப் புரட்டிப்போடும் பேரிடர்! 10 பேர் பலி?

ஓய்வுபெறும் நாளில் ஊழியர்கள் இடைநீக்கம் இல்லை: தமிழ்நாடு அரசு

புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை: பவுன் ரூ.77,000-ஐ நெருங்கியது!

இந்திய யானையை அமெரிக்க எலி தாக்குவது போலத்தான் டிரம்ப் வரி: ரிச்சர்டு வோல்ஃப்

SCROLL FOR NEXT