நிதின் கட்கரி 
இந்தியா

மோடி அரசின் கீழ் இந்திய சாலைகள் அமெரிக்காவையே விஞ்ஞிவிட்டன: கட்கரி

இந்திய சாலை வலையமைப்பு பற்றி நிதின் கட்கரி கூறுவது பற்றி..

DIN

பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் இந்தியாவில் சாலை வலையமைப்பு அமெரிக்காவை விட பெரியளவில் விஞ்ஞியுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

முன்ஷி புலியா மற்றும் குர்ராம் நகர் மேம்பாலத்தைத் தொடங்கிவைத்து உரையாற்றிய மத்திய அமைச்சர் கட்கரி, அடுத்த இரண்டு ஆண்டுகளில் உ.பி.யின் தேசிய நெடுஞ்சாலை வலையமைப்பு அமெரிக்காவை விட சிறந்ததாக இருக்கும் என்று நான் வாக்குறுதி அளிக்கிறேன்.

உத்தரப் பிரதேசத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்த மத்திய அமைச்சர் கட்கரி, நாட்டில் நிதி பற்றாக்குறை இல்லை, ஆனால் நேர்மை கொண்ட தலைவர்கள் தேவைப்பட்டன.

இந்தியாவை விஸ்வ குருவாகவும், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாகவும் மாற்ற வேண்டும் என்ற கனவு பிரதமர் மோடிக்கு உள்ளது.

நாட்டின் வளர்ச்சிக்கான இயந்திரமாக இந்தியாவும், உ.பி.யும் மாறி வருகின்றது. எனது ஐந்து வருட அமைச்சர் பதவிக்காலம் முடிவதற்குள் ரூ. 5 லட்சம் கோடி மதிப்புள்ள நெடுஞ்சாலைத் திட்டங்களை நிறைவேற்ற நான் விரும்புகிறேன். இதுவரை ரூ.3.5 லட்சம் கோடி மதிப்புள்ள திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

உ.பி.யின் நெடுஞ்சாலை வலையமைப்பு விரிவாக்கத்திற்கு நிதிப் பற்றாக்குறை இருக்காது என்று உறுதியளித்த அவர், ஒரு அமைச்சராக இதுவரை ரூ.50 லட்சம் கோடி மதிப்புள்ள திட்டங்களைக் கையாண்டுள்ளதாகவும், அதில் எந்தவித தவறும் ஏற்பட்டதில்லை.

இதையும் படிக்க: காதல் வருவது எப்படி?

உ.பி. ஒரு வளர்ச்சி இயந்திரமாக மாற வேண்டும் என்றும், அதன் ஏற்றுமதி ஒன்றரை மடங்கு வளர்ச்சியடைய வேண்டும் என்று பிரதமர் விரும்புவதாக அவர் கூறினார். உ.பி.யின் செழிப்புக்கு உள்கட்டமைப்பு வளர்ச்சி முக்கியமானது, மேலும் அதை ஒரு சிறந்த மாநிலமாக மாற்ற நாம் அனைவரும் உறுதி பூண்டுள்ளோம். முதல்வர் யோகி ஆதித்யநாத் ஏற்கனவே சட்டம் ஒழுங்கு நிலைமையை மேம்படுத்துவதன் மூலம் ராம ராஜ்ஜியத்தை நிறுவியுள்ளார் என்று அவர் கூறினார்.

முதல்வர் ஈர்த்த தொழில்துறை முதலீடு மற்றும் விவசாயிகளுக்காக மேற்கொள்ளப்பட்ட பணிகள் காரணமாக, அந்த மாநிலம் நாட்டின் வளர்ச்சியடையாத மாநிலங்களில் ஒன்றாக இனி இருக்காது என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பியூன் வேலை: பிஎச்டி, எம்பிஏ உள்பட 24.76 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பம்!

கோவை: கிணத்தைக் காணோம் வடிவேலு காமெடி பாணியில் இல்லாத வீட்டுக்கு வரி!

துல்கர் சல்மான் - 41 படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்!

வரம் நீ... அர்ச்சனா கௌதம்

SCROLL FOR NEXT