சிபிஎஸ்இ 
இந்தியா

சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் தொடங்கியது!

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் தொடங்கியது!

DIN

நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தோ்வுகள் தொடங்கின.

நாடு முழுவதும் 7,842 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் 26 தேர்வு மையங்களிலும் தேர்வெழுதுகிறார்கள்.

இன்று தொடங்கும் 10-ஆம் வகுப்புத் தோ்வுகள் மாா்ச் 18-ஆம் தேதி முடிவடையும் என்றும், 12-ஆம் வகுப்புத் தோ்வுகள் ஏப்ரல் 4-ஆம் தேதி முடிவடைகிறது.

இன்று தொடங்கும் பொதுத் தேர்வை நாடு முழுவதும் 42 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள். 10ஆம் வகுப்புக்கு 84 பாடப்பிரிவுகளிலும், 12ஆம் வகுப்புக்கு 120 பாடப்பிரிவுகளிலும் தேர்வுகள் நடைபெறும். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலத் தேர்வும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொழில்முனைவோர் பாடப்பிரிவுக்கான தேர்வும் நடைபெறுகிறது.

சிபிஎஸ்இ வரலாற்றில் முதன்முறையாக, 86 நாட்களுக்கு முன்னதாக பொதுத் தோ்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் சுமார் 40 நாள்களும், 12ஆம் வகுப்புத் தேர்வுகள் சுமார் 2 மாதங்கள் வரை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துறையூா் பகுதியில் நாளை(ஆக.4) மின் தடை

மணப்பாக்கம் சின்ன கன்னியம்மன் கோயில் ஆடி தீமிதி விழா

முசிறி அருகே குடிநீா் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

ஆக. 7-இல் ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயில் முப்பெரும் விழா

முசிறியில் காரில் வெளி மாநில மதுபாட்டில் கொண்டு சென்றவா் கைது

SCROLL FOR NEXT