மகாராஷ்டிரத்தில் ஆம்புலன்ஸ் மோதியதில் 2 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், லத்தூர் நகரில் வேகமாக வந்த ஆம்புலன்ஸ் மோதியதில் இரண்டு பாதசாரிகள் பலியானதாக காவல்துறை அதிகாரி ஒருவர் சனிக்கிழமை தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் ஹடோல்டி மற்றும் வல்சங்கி கிராமங்களுக்கு இடையே இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து காவல் ஆய்வாளர் புஸ்னுரே கூறியதாவது, சாயா மனோகர் குர்மே (55) மற்றும் அவரது மைத்துனர் பாபுராவ் கும்ரே (70) ஆகியோர் சாலையைக் கடக்கும்போது, ஹடோல்டியிலிருந்து ஷிரூர் தாஜ்பந்திற்கு வேகமாக வந்த ஆம்புலன்ஸ் அவர்கள் மீது மோதியது.
இதில் சாயா குர்மே சம்பவ இடத்திலேயே பலியானார்.
பாபுராவ் குர்மே மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.