முகப்பு
இந்தியா

பாஜக அரசு ரிவர்ஸ்-கியரில் செல்கிறது: நவீன் பட்நாயக்

பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ள ஒடிஸா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்!

Updated On : 17 பிப்ரவரி, 2025 at 4:21 PM
பகிர்:

புவனேசுவரம் : பாஜக அரசு பின்னோக்கிச் செல்வதாக ஒடிஸா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் கடுமையான விமர்சனங்களை சுமத்தியுள்ளார்.

ஒடிஸாவில் சுமார் 24 ஆண்டுகளைக் கடந்தும் ஆளுங்கட்சியாகக் கோலோச்சி வந்த பிஜு ஜனதா தளத்தின் வெற்றிக்கு, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முற்றுப்புள்ளி வைத்து ஆட்சிக்கு வந்துளளது பாரதீய ஜனதா கட்சி. அம்மாநில முதல்வராக மோகன் சரண் மாஜீ பதவி வகிக்கிறார்.

ஒடிஸாவில் 2025-26 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அம்மநில முதல்வர் மோகன் சரண் மாஜீ இன்று(பிப். 17) தாக்கல் செய்தார். ரூ. 2.90 லட்சம் கோடியிலான இந்த பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஒடிஸா எதிர்க்கட்சித் தலைவரும் பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவருமான நவீன் பட்நாயக் பாஜக அரசையும் பட்ஜெட்டையும் விமர்சித்து பேசியுள்ளார்.

அவர் செய்தியாளர்களுடன் இன்று(பிப். 17) பேசியதாவது, “கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பெருந்தொகை இதுவரை செலவழிக்கப்படவில்லை. தொழில் வளர்ச்சி சரிந்துள்ளது. அதேபோல, மாநிலத்தின் நிதிநிலையும் சரிந்துள்ளது. இதை பார்க்கும்போது, இரட்டை இன்ஜின் அரசு ரிவர்ஸ் கியரில் செல்வதாகவே தெரிகிறது.

அத்தியாவசிய பொருள்களின் விலை ஒவ்வொருவரையும் பாதிக்கிறது. விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதும் தொடருகிறது. வேலையில்லா திண்டாட்டமும் இருந்துகொண்டேதான் இருக்கிறது” என்றார்.

இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்து பேசியுள்ள ஒடிஸா துணை முதல்வர் கனக் வர்தன் சிங் தியோ பேசுகையில், “நவீன் பட்நாயக் 24 ஆண்டுகளாக எதுவுமே செய்யவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.