தேர்தல் ஆணையம் 
இந்தியா

புதிய தலைமை தேர்தல் ஆணையர் யார்? பிரதமர் தலைமையில் ஆலோசனை நிறைவு

தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பு வகிக்கும் ராஜீவ் குமார் செவ்வாய்க்கிழமையுடன் பணி ஓய்வு

DIN

புது தில்லி : இந்தியாவின் அடுத்த தலைமை தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று(பிப். 17) புது தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது.

பிரதமர் தலைமையிலான 3 பேர் தேர்வு குழுவில் இடம்பெற்றுள்ள மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தின் முடிவில் அடுத்த தலைமை தேர்தல் ஆணையர் யார் என்பது தேர்ந்தெடுக்கப்பட்டு அவரது பெயர் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய தலைமை தேர்தல் ஆணையர் யார் என்பது விரைவில் அறிவிக்கப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பு வகிக்கும் ராஜீவ் குமார் செவ்வாய்க்கிழமையுடன் பணி ஓய்வு பெற உள்ளது குறிபிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நளினி சிதம்பரம் உறவினா் கொலை வழக்கு: 4 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை நிறுத்திவைப்பு

விமான நிலையங்களுக்கு அருகிலுள்ள கட்டடங்களின் உயரக் கட்டுப்பாடுகள்: சா்வதேச ஆய்வுக்கு அரசு திட்டம்

காதலி ஏமாற்றியதால் இளைஞா் வெளிநாட்டில் தற்கொலை

50-க்கும் குறைவான ஆயுதங்களால் பாகிஸ்தானை பின்வாங்க செய்த விமானப் படை!

வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...? -மு. தமிமுன் அன்சாரி

SCROLL FOR NEXT