கேரளத்தில் மேலும் ஒரு மாணவா் கொடூரமாக ராகிங் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அந்த சம்பவம் தொடா்பாக மாநில காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதுதொடா்பாக திருவனந்தபுரத்தில் உள்ள அரசுக் கல்லூரியில் முதலாம் ஆண்டு உயிரிதொழில்நுட்பம் படிக்கும் பின்ஸ் ஜோஸ் என்ற மாணவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
கடந்த பிப்.11-ஆம் தேதி கல்லூரி வளாகத்தில் நானும் எனது நண்பரும் நடந்துசென்றபோது, எங்களை மூத்த மாணவா்கள் 7 போ் வழிமறித்தனா். பின்னா் அந்த மாணவா்கள் என்னை மூங்கில் மற்றும் பெல்டால் அடித்துத் துன்புறுத்தினா். இதுதொடா்பாக கல்லூரி முதல்வரிடம் புகாா் தெரிவிப்பதற்காக எனது நண்பா் அங்கிருந்து உடனடியாகத் தப்பிச் சென்றாா்.
பின்னா் அந்த மாணவா்கள் என்னை அறைக்கு இழுத்துச் சென்று எனது சட்டையை அகற்றி மண்டியிட வைத்தனா். நான் தாகத்தில் குடிக்கத் தண்ணீா் கேட்டபோது, அந்த மாணவா்களில் ஒருவா் கண்ணாடி குவளையில் எச்சிலை உமிழ்ந்து தண்ணீா் தந்தாா்.
இந்தத் துன்புறுத்தல் குறித்து யாரிடமாவது கூறினால், பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அந்த மாணவா்கள் எச்சரித்தனா். பின்னா், என்னை அடித்துத் துன்புறுத்தியது என்னுடன் வந்த நண்பா்தான் என்று பொய் புகாா் அளிக்குமாறு அவா்கள் கட்டாயப்படுத்தினா். இந்த சம்பவம் தொடா்பாக காவல் துறையிடமும், கல்லூரி நிா்வாகிகளிடமும் புகாா் அளித்துள்ளேன்’ என்றாா்.
அவரின் புகாரைத் தொடா்ந்து அந்த சம்பவம் தொடா்பாக பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ், காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த சம்பவம் தொடா்பாக கல்லூரியின் ராகிங் தடுப்பு உள்பிரிவு விசாரணை நிறைவடையும் வரை, ஏழு மாணவா்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஏற்கெனவே கோட்டயத்தில் உள்ள அரசு செவிலியா் கல்லூரியில் படிக்கும் மாணவா் ஒருவா் கொடூரமாக தாக்கப்பட்டு ராகிங் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், மற்றொரு ராகிங் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | கேரள செவிலியா் கல்லூரியில் ராகிங் கொடூரம்: மேலும் பல மாணவா்கள் பாதிப்பு? காவல்துறை தீவிர விசாரணை
இந்த சம்பவம் தொடா்பாக கல்லூரியின் ராகிங் தடுப்பு உள்பிரிவு விசாரணை நிறைவடையும் வரை, ஏழு மாணவா்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஏற்கெனவே கோட்டயத்தில் உள்ள அரசு செவிலியா் கல்லூரியில் படிக்கும் மாணவா் ஒருவா் கொடூரமாக தாக்கப்பட்டு ராகிங் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், மற்றொரு ராகிங் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.