கோப்புப்படம் 
இந்தியா

தில்லி முதல்வர் பதவியேற்பு விழா: 25,000 காவலர்கள் குவிப்பு!

தில்லி முதல்வர் பதவியேற்பு விழா குறித்து...

DIN

தில்லி முதல்வர் பதவியேற்பு விழா நாளை(பிப். 20) ராம்லீலா திடலில் நடைபெறவுள்ள நிலையில், புதுதில்லி நகரின் மத்திய, வடக்கு பகுதிகளில் 25,000 காவலர்கள் பாதுகாப்புப் பணிகளுக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

தில்லியின் புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக பாஜக தீவிரமாக ஆலோசனை நடத்தி வரும் சூழலில், புதிய முதல்வர் யார் என்பது குறித்த அறிவிப்பு இன்றிரவு வெளியாகவுள்ளது

இதற்கிடையே, தில்லி பொதுப் பணித் துறை சார்பில் ராம்லீலா திடலில் பதவியேற்பு விழாவுக்கு ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன.

இதையும் படிக்க: கும்பமேளாவில் நீராடும் பெண்களின் விடியோக்களை விற்கும் கும்பல்!

இந்நிகழ்ச்சிக்கு பாஜக தலைவர்கள் மற்றும் பாஜக ஆளும் முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

25,000-க்கும் மேற்பட்ட காவலர்களும் 15-க்கும் மேற்பட்ட துணை ராணுவக் குழுவினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ராம்லீலா திடலில் 5000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

2,500-க்கும் மேற்பட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக மேலும் அவர் தெரிவித்தார்.

தில்லி நகர போக்குவரத்து காவல் துறை சார்பிலும் பிப். 20-ஆம் தேதி நண்பகலுக்குப் பிறகு ராம்லீலா நோக்கிச் செல்லும் வாகனங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கவும், அதைச் சுற்றியுள்ள சிறுகடைகள், நடைபாதை வியாபாரிகள் ஆகியோர் பிற்பகலுக்குப் பிறகு கடைகளைத் திறக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை, ஜெய்ப்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்

காா் மோதியதில் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்: 3 போ் படுகாயம்

ஒசூரில் ‘நலம்காக்கும் ஸ்டாலின்’ திட்டம் 1,962 போ் பங்கேற்பு

நீதிமன்றத்துக்கு தவறான தகவல்: ரயில்வே காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

பட்டியல் இனத்தவருக்கு ஆதித்தமிழா் என ஜாதி சான்று கோரிய மனு முடித்துவைப்பு

SCROLL FOR NEXT