மசூதி அருகே ஆக்கிரமிப்புகள் இடிக்கப்பட்ட இடம் படம் - பிடிஐ
இந்தியா

தில்லி மசூதி ஆக்கிரமிப்பு இடிப்பு: வன்முறையில் 5 காவலர்கள் காயம்!

தில்லி ராம்லீலா திடலுக்கு அருகே மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமித்திருந்ததாகக் கூறி மசூதி இடிக்கப்பட்டது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

தில்லி ராம்லீலா திடலுக்கு அருகே மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமித்து மசூதி கட்டப்பட்டுள்ளதால், அதனை இடிக்க முற்பட்டபோது மூண்ட வன்முறையில் 5 காவலர்கள் படுகாயம் அடைந்தனர்.

அதிகாலையில் மசூதி இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதால், வன்முறை ஏற்பட்டது.

தில்லி ராம்லீலா திடலுக்கு அருகேவுள்ள துர்க்மான் கேட் பகுதியில் மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த மசூதி மற்றும் கல்லறையை இடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மசூதி அருகே ஆக்கிரமிப்புகள் இடிப்பு

இதனைத் தொடர்ந்து சையத் ஃபயஸ் இலாஹி மசூதியை இடிக்க முற்பட்டபோது சிலர் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட வன்முறையில் காவலர்கள் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

எனினும் சிறிது நேரத்தில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதற்றமான சூழலை கருத்தில்கொண்டு அப்பகுதியைச் சுற்றிலும் ஏராளமான காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், உள்ளூர் மக்களுடன் அமைதிக்கான பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Five Delhi Police personnel injured as anti-encroachment drive near mosque turns violent

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்றுமுதல் பொங்கல் சிறப்புப் பேருந்துகள்! எங்கிருந்து இயக்கப்படும்? முழு விவரம்!

மேட்டூர் அணை நிலவரம்!

சென்னைக்கு 800 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம்! எங்கே கரையைக் கடக்கும்?

சித்த மருத்துவக் கல்லூரியில் தமிழ் நிறை பொங்கல் விழா

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாம்: 1,056 போ் பயன்

SCROLL FOR NEXT