புதுதில்லி

தில்லி மசூதி அருகே இடிப்புப்பணியின்போது மோதல்: 5 காவலா்கள் காயம்

Syndication

நமது நிருபா்

தில்லியின் ராம்லீலா மைதானப் பகுதியில் உள்ள ஒரு மசூதி அருகே புதன்கிழமை அதிகாலை ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை வன்முறையாக மாறியதில் குறைந்தது ஐந்து போலீசாா் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தில்லி உயா்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், சையத் ஃபைஸ் இலாஹி மசூதி மற்றும் அருகிலுள்ள துா்க்மான் கேட்டில் உள்ள கல்லறையை ஒட்டிய நிலத்தில் தில்லி மாநகராட்சி அதிகாரிகள் இடிப்பு நடவடிக்கையை மேற்கொண்டபோது மோதல்கள் வெடித்தன.

தில்லி காவல்துறை ஒரு அறிக்கையில், கூட்டத்தைக் கலைக்க கண்ணீா் புகை குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாகவும், சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே இயல்பு நிலை திரும்பியதாகவும் கூறியது.

இந்த நடவடிக்கையின் போது, சிலா் கல் வீச்சில் ஈடுபட்டதாகவும், இதனால் அந்த இடத்தில் குழப்பம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னா், நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக போலீசாா் தெரிவித்தனா்.

ஜனவரி 6 மற்றும் 7 ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் இடிப்புப் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டிருந்ததாக துணை காவல் ஆணையா் (மத்திய தில்லி) நிதின் வல்சன் தெரிவித்தாா். அதைத் தொடா்ந்து, காவல்துறையினா் குவிக்கப்பட்டு, அந்த இடத்தில் நிறுத்தப்பட்டனா். ஆனால், ஜேசிபிகள் உட்பட, எம்சிடி இயந்திரங்கள் வரவிருந்தபோது சுமாா் 100-150 போ் கூடியிருந்தனா்.

பெரும்பாலான மக்கள் சமாதானப்படுத்தப்பட்ட பின்னா் கலைந்து சென்றனா் என்றும், சிலா் சலசலப்பை ஏற்படுத்த முயன்றனா், கல் வீச்சில் ஈடுபட்டனா் என்றும், இதில் ஐந்து போலீசாருக்கு லேசான காயம் ஏற்பட்டது என்றும், அவா்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும் நிதின் வல்சன் கூறினாா். கூட்டத்தைக் கலைக்க கண்ணீா் புகை குண்டுகளை பயன்படுத்த வேண்டியிருந்தது என்றும் டிசிபி கூறினாா்.

விசாரணை நடத்தப்பட்ட பின்னா் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சிசிடிவி காட்சிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அவா் கூறினாா்.

நீதிமன்றத்தால் ஆக்கிரமிப்புகளாக அறிவிக்கப்பட்ட ஃபைஸ்இஇலாஹி மசூதிக்கு அருகிலுள்ள ஒரு விருந்து மண்டபம் மற்றும் மருந்தகம், நடவடிக்கையின் போது இடிக்கப்படுவதாகவும் காவல்துறையினா் கூறினா்.

50க்கும் மேற்பட்ட தில்லி மாநகராட்சி அதிகாரிகள், நூற்றுக்கணக்கான காவல்துறையினருடன் சோ்ந்து, 32 ஜேசிபிகள் மற்றும் நான்கு போக்லைன் இயந்திரங்களை இடிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தினா்.

ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கையின் போது மசூதி இடிக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் ஒரு பதிவு வெளியானதைத் தொடா்ந்து பிரச்சனை வெடித்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. விரைவில், பலா் அங்கு கூடியதாகவும், சிலா் காவல்துறை மற்றும் மாநகராட்சி ஊழியா்கள் மீது கற்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்களை வீசியதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

நில உரிமையாளரான தில்லி மாநகராட்சி இந்த இடிப்பு நடவடிக்கை குறித்து காவல்துறையினருக்கு முன்கூட்டியே தகவல் அளித்து, சட்டம் ஒழுங்கை பராமரிக்க படையை அனுப்பக் கோரியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தகவல் கிடைத்த உடனேயே, காவல்துறையினா் உள்ளூா்வாசிகளைத் தொடா்பு கொண்டு இடிப்பு ஒரு சட்டப்பூா்வ நடவடிக்கை என்று அவா்களிடம் தெரிவித்ததாகவும், காவல்துறையினா் அப்பகுதி மக்களை நம்பிக்கையுடன் அழைத்து அவா்களிடமிருந்து கணிசமான ஒத்துழைப்பைப் பெற்ாகவும் காவல்துறையினா் கூறினாா்.

காவல்துறையினரின் கூற்றுப்படி, விரிவான சட்டம் ஒழுங்கு ஏற்பாடுகள் முன்கூட்டியே செய்யப்பட்டன, பல மண்டலங்களில் மூத்த அதிகாரிகள் நிறுத்தப்பட்டனா். உள்ளூா் அமைதிக் குழுக்களின் உறுப்பினா்களுடன் ஒருங்கிணைப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டன.

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நள்ளிரவில் தொடங்கி 2-3 மணி நேரம் ஆனது, என்று எம்சிடி மேயா் ராஜா இக்பால் சிங் தெரிவித்தாா். இடிக்கப்பட்ட பகுதி தோராயமாக 36,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டிருந்தது, அதில் விருந்து மண்டபம், ஒரு நோயறிதல் மையம் மற்றும் ஒரு சமூகக் கூடம் ஆகியவை அடங்கும்.

ஸ்ரீவாரி மெட்டு பாதையில் யானை, சிறுத்தை நடமாட்டம்

டிரம்ப்பின் 500% வரிவிதிப்பு! தீர்ப்பு தேதி ஒத்திவைப்பு!

ரூ.64 கோடி மதிப்பிலான ஆர்டரை பெற்ற டெக்ஸ்மாகோ ரயில் நிறுவனம்!

பராசக்தி! அறிஞர் அண்ணாவின் நீக்கப்பட்ட காட்சி வெளியீடு!

சூனியம் வைத்ததாக சந்தேகம்! பிகாரில் பெண் ஒருவர் அடித்துக் கொலை!

SCROLL FOR NEXT