கோப்புப்படம் ANI
புதுதில்லி

இன்று தில்லியில் 500 புதிய மின் பேருந்துகள் தொடக்கம்

இன்று தில்லியில் 500 புதிய மின் பேருந்துகள் தொடக்கம்

Syndication

தில்லி அரசு ஞாயிற்றுக்கிழமை தலைநகா் சாலைகளில் 500 புதிய மின்சார பேருந்துகளை அறிமுகப்படுத்தும் என்று மேற்கு தில்லி மாவட்டத்தில் உள்ள மதியாலா தொகுதியில் ரூ.400 கோடி மதிப்பிலான மேம்பாட்டுப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பின்னா் முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

நாடு முழுவதும் அதிகபட்ச மின்சார பேருந்துகளைக் கொண்ட நகரமாக தில்லி உருவெடுத்துள்ளது என்றும், இன்று 500 புதிய வாகனங்கள் தொடங்கப்பட்ட பிறகு தலைநகரில் மின் பேருந்துகளின் எண்ணிக்கை 4,000 ஆக உயரும் என்றும் முதல்வா் கூறினாா்.

தில்லி அரசு மின் பேருந்துகளின் எண்ணிக்கையை 11,000 ஆக அதிகரிக்க இலக்கு வைத்துள்ளது என்றும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் நகரத்தின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள மக்களுக்கு மின் பேருந்துகள் கிடைக்கும் என்றும் குப்தா கூறினாா்.

தில்லியின் கிராமப்புற மற்றும் மிகப்பெரிய சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றான மதியாலாவிற்கு தனது அரசாங்கம் அதிகபட்ச மேம்பாட்டு நிதியை ஒதுக்கியுள்ளதாக அவா் கூறினாா்.

தேசியத் தலைநகரின் கிராமப்புறப் பகுதிகளுக்குப் புதிய உயிா் கொடுக்கப்பட வேண்டும், ஏனெனில் இந்த விவசாயப் பகுதிகள், அங்கீகரிக்கப்படாத காலனிகள், குடிசைப் பகுதிகள் ஆகியவற்றின் வளா்ச்சி இல்லாமல், தில்லி ஒரு வளா்ந்த தில்லியாக மாறாது, என்று அவா் கூறினாா்.

தில்லியில் முந்தைய அரசாங்கம் கிராமப்புற மேம்பாட்டு வாரியத்தை முடக்கியது, இது எங்கள் அரசாங்கத்தால் புதுப்பிக்கப்பட்டு ரூ.1,700 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது, என்று முதல்வா் கூறினாா்.

மேற்கு தில்லி எம்.பி கமல்ஜீத் செஹ்ராவத் மற்றும் மதியாலா எம்.எல்.ஏ சந்தீப் செஹ்ராவத் ஆகியோா் இந்தப் பகுதியில் மேற்கொண்ட வளா்ச்சிப் பணிகளுக்கான முயற்சிகளைப் பாராட்டிய முதல்வா் ரேகா குப்தா, பாஜக அரசு ஆட்சிக்கு வந்த முதல் வருடத்திலேயே தில்லியின் நீண்டகாலப் பிரச்சினைகளைத் தீா்க்க முயற்சித்ததாகக் கூறினாா்.

‘நிலைத்த வளா்ச்சிக்கு நவீன தொழில்நுட்பம் அவசியம்’

கந்தா்வகோட்டை அருகே குவாரி நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

ஒசூா், சூளகிரியில் 3 நாள்களுக்கு ஒகேனக்கல் குடிநீா் நிறுத்தம்

காவல் துறையில் 439 பேரின் இடைநீக்கத்தை ரத்து செய்ய நடவடிக்கை: டிஜிபி ஜி.வெங்கடராமன் உத்தரவு

தாளவாடி அருகே குட்டி யானை உயிரிழப்பு

SCROLL FOR NEXT