மகா கும்பமேளா  
இந்தியா

மகா கும்பமேளா நீட்டிக்கப்படாது!

மகா கும்பமேளா நீட்டிக்கப்படாது என்று மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு...

DIN

மகா கும்பமேளா நீட்டிக்கப்படாது என்று பிரயாக்ராஜ் மாவட்ட ஆட்சியர் ரவீந்திர குமார் மந்தர் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் மார்ச் மாதம் வரை மகா கும்பமேளா நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில், அதனை மறுத்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 144 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும், கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆன்மிக-கலாசார நிகழ்வுக்கு உலகெங்கிலும் இருந்து துறவிகள், சாதுக்கள், பக்தா்கள் பிரயாக்ராஜில் குவிகின்றனா்.

கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகியவை கூடும் திரிவேணி சங்கமத்தில் பௌஷ பொ்ணிமியை முன்னிட்டு கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கி, மகா கும்பமேளா கடந்த 37 நாள்களாக பெரும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிகழ்வில் இதுவரை 55 கோடிக்கும் அதிகமான பக்தா்கள் புனித நீராடியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 26-ஆம் தேதி மகா சிவராத்திரி தினத்தில் மகா கும்பமேளா நிறைவடைகிறது.

மகா கும்பமேளா இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராட குவிந்து வருகின்றனர். இதனால், மகா கும்பமேளாவை நீட்டிக்க வேண்டும் என்று சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பலர் கோரிக்கை வைத்திருந்தனர்.

இதனிடையே, மகா கும்பமேளா நீட்டிக்கப்படவுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகின்றன.

இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ள பிரயாக்ராஜ் மாவட்ட ஆட்சியர், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், கும்பமேளாவை நல்ல நாளில் முடிப்பதற்காக முன்கூட்டியே திட்டமிட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி பிப். 26ஆம் தேதி நிறைவடையும். அதுவரை சீரான போக்குவரத்து உறுதி செய்யப்படும். பக்தர்கள் அனைவரும் நெரிசலின்றி புனித நீராடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூலித்தேவருக்கு தேசம் உளமார மரியாதை செலுத்துகிறது- ஆளுநர் ஆர்.என்.ரவி

மேட்டூர் அணை நீர் வரத்து அதிகரிப்பு!

தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறிக் கொண்டிருக்கிறது: ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தினம் தினம் திருநாளே!

சுமை ஆட்டோ மோதி தொழிலாளி பலி

SCROLL FOR NEXT