மத்தியப் பிரதேசத்தில் காவல்துறையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 பெண் நக்சல்கள் இன்று சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பாலகாட் மாவட்டத்தில் ம.பி., சத்தீஸ்கர் எல்லையில் உள்ள வனப்பகுதியில் நக்சல் தடுப்புப் படையினர் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் இன்று நக்சல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில், இன்று காலை அங்கு பதுங்கியிருந்த நக்சல்களுடன் காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் சுப்கர் வனப்பகுதியில் உள்ள ரோண்டா வன முகாம் அருகே பெண் நக்சல்கள் 3 பேர் நக்சல் தடுப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகியுள்ளது.
நக்சல்கள் கொல்லப்பட்ட இடத்திலிருந்து ரைஃபிள்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நக்சல்கள் சிலர் தப்பித்துச் சென்றதாகவும் அவர்களைப் பிடிக்க 12 காவல்துறை குழுக்கள் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.