ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் ஷர்மா (கோப்புப்படம்) 
இந்தியா

முதல்வருக்கு கொலை மிரட்டல்!

ராஜஸ்தான் முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

DIN

ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் பஜன்லால் ஷர்மாவிற்கு சிறைவாசி ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

ஜெய்பூர் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று (பிப்.21) இரவு செல்போன் மூலம் அழைப்பு விடுத்த நபர் அம்மாநில முதல்வர் பஜன் லால் ஷர்மாவிற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்நிலையில், உடனடியாக விசாரணை மேற்கொண்ட அம்மாநில காவல் துறையினர், அந்த அழைப்பானது தௌஸா மாவட்டத்திலுள்ள சலவாஸ் சிறைச்சாலையிலிருந்து வந்திருப்பதை கண்டுபிடித்தனர்.

இதையும் படிக்க: 'என்னை சாதாரணமாக நினைக்காதீர்கள்' - பட்னவீஸுக்கு ஷிண்டே எச்சரிக்கை!

பின்னர், அதிகாலை 3 முதல் 7 மணி வரை நடத்தப்பட்ட தேடுதல் சோதனையின்போது பாலியல் வன்கொடுமை வழக்கில் அங்கு ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கைதி ரிங்கு (வயது 29) என்பவர்தான் முதல்வர் பஜன்லால் ஷர்மாவிற்கு கொலை மிரட்டல் விடுத்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும், அவரிடமிருந்து ஒரு செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டு அடுத்தக்கட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அம்மாநில காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, கடந்த 2023 தேர்தலில் வெற்றி பெற்று ராஜஸ்தானில் பாஜக ஆட்சி அமைந்ததிலிருந்து பஜன்லால் ஷர்மா அம்மாநில முதலமைச்சராக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் நாள் விசாரணை முடிந்து சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியேறிய Vijay!

டிசிஎஸ் 3வது காலாண்டு லாபம் 14% சரிவு!

சிபிஐ வலையில் சிக்கிக்கொண்ட விஜய்! - செல்வப் பெருந்தகை | செய்திகள் : சில வரிகளில் | 12.1.26

மமதா மீது சிபிஐ வழக்குப் பதிய வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு!

குளிர் அலை: அதிகாலையில் நடைப்பயிற்சி வேண்டாமே! செய்யக்கூடாதவை..

SCROLL FOR NEXT