கோப்புப்படம்.  
இந்தியா

ஜார்க்கண்ட்: ஆடு திருடியதாக இருவர் அடித்துக் கொலை

கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் ஆடு திருடியதாக பிடிபட்ட இரண்டு பேர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டதாக சனிக்கிழமை போலீஸார் தெரிவித்தனர்.

DIN

ஜார்க்கண்ட் மாநிலம், கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் ஆடு திருடியதாக பிடிபட்ட இரண்டு பேர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டதாக சனிக்கிழமை போலீஸார் தெரிவித்தனர்.

சகுலியா காவல் நிலையப் பகுதியில் உள்ள ஜோட்சா கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு இந்தச் சம்பவம் நடந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

ஆட்டை திருடியபோது அதன் உரிமையாளரால் இருவரும் பிடிபட்டனர்.

இதைத் தொடர்ந்து, கும்பலுடன் இணைந்து அவர்களை உரிமையாளர் தாக்கினார். இந்த சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார் என்று காவல்துறை கண்காணிப்பாளர் ரிஷர்பா கர்க் கூறினார்.

கூகுள் பே மூலம் பணப் பரிமாற்றம் செய்தால்.. இனி கட்டணம்! புதிய நடைமுறை!

உடனே அவர்கள் எம்ஜிஎம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டனர் என்றார்.

ஆடு உரிமையாளரை கைது செய்துள்ளோம். மற்ற குற்றவாளிகளும் விரைவில் பிடிபடுவார்கள் என்று அவர் மேலும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் முதல் கட்டத் தேர்தல்! இன்றுடன் பிரசாரம் ஓய்வு!

கோவை சம்பவம்: தடவியல் நிபுணர்கள் சோதனை! நடந்தது என்ன?

இளையான்குடி அருகே இருதரப்பினா் இடையே மோதல்-கல்வீச்சு: 5 போ் காயம்

நெல்லையில் மதுபோதையில் நண்பரைக் கொன்றவர் கைது!

கோவை சுட்டுப் பிடிப்பு சம்பவம்: காவலருக்கு அரிவாள் வெட்டு!

SCROLL FOR NEXT