கோப்புப்படம்  ANI
இந்தியா

கும்பமேளா நாளையுடன் நிறைவு! கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு!

பிரயாக்ராஜில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பது பற்றி...

DIN

மகா கும்பமேளா புதன்கிழமையுடன் நிறைவுபெறும் நிலையில், கூட்டத்தைக் கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் மிகப் பெரிய ஆன்மிக - கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து இதுவரை 63 கோடிக்கும் மேற்பட்டோா் வருகை தந்து புனித நீராடியுள்ளனா்.

மகா சிவராத்திரி நாளான பிப்ரவரி 26 ஆம் தேதி நடைபெறும் இறுதி புனித நீராடலுடன் இந்த விழா நிறைவுபெறவுள்ளது. இந்த நிலையில், அதிகளவிலான பக்தர்கள் பிரயாக்ராஜில் குவிந்து வருகின்றனர்.

கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று மாலை 4 மணிமுதல் பிரயாக்ராஜ் முழுவதும் வாகனங்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளனர்.

பால், காய்கறிகள், மருந்துகள், எரிபொருள் மற்றும் அவசரகால வாகனங்கள் போக்குவரத்துதவிர பிற வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்று காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும், பிரயாக்ராஜில் பக்தர்கள் எந்த வழித்தடத்தில் நுழைகிறார்களோ, அதற்கு அருகிலுள்ள பகுதிகளிலேயே புனித நீராட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், பிரயாக்ராஜில் புனித நீராடிவிட்டு அயோத்தி செல்லும் பக்தர்கள் அதிகரித்து வரும் நிலையில், அயோத்தியிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளம்: ஓடும் ரயிலில் இருந்து பெண்ணைத் தள்ளிவிட்டவர் கைது

அனைத்து வாக்காளா்களும் கணக்கெடுப்புப் படிவத்தை நிரப்ப வேண்டும்: ஆட்சியா்

தூத்துக்குடி மாநகராட்சியைக் கண்டித்து தவெக போராட்டம் அறிவிப்பு

இன்று முதல் செய்யாறு தொகுதியில் வாக்காளா் படிவம் விநியோகம்

தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

SCROLL FOR NEXT