இந்தியா

கோவாவில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவுக்கு இட்லிதான் காரணம்: பாஜக எம்.எல்.ஏ. கருத்தால் சர்ச்சை

சுற்றுலா பயணிகளின் வருகை குறைவுக்கு இட்லியே காரணம் என்று பாஜக எம்.எல்.ஏ. பேசியிருப்பது சமூக ஊடகங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

DIN

கோவாவில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவுக்கு இட்லியே காரணம் என்று பாஜக எம்.எல்.ஏ. பேசியிருப்பது சமூக ஊடகங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கோவாவில் சமீபகாலமாக சர்வதேச சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, வியாழக்கிழமை செய்தியாளர்களுடனான சந்திப்பில் பாஜக எம்.எல்.ஏ. மைக்கேல் லோபோ கூறியதாவது ``கோவாவுக்கு வருகை தரும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், மாநிலத்தின் நிதி நிலைமையும் பாதிப்படைகிறது. சில வெளிநாட்டினர் ஒவ்வோர் ஆண்டும் கோவாவுக்கு சுற்றுலா வருவர். ஆனால், தற்போது அவர்களின் வருகையும் அரிதாகி விட்டது.

போர் காரணமாகவும், ரஷிய மற்றும் உக்ரைனைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் கோவாவுக்கு சுற்றுலா மேற்கொள்வதை நிறுத்திவிட்டனர்.

கோவாவுக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததற்கு, அரசின் மீது மட்டுமே பழியிட முடியாது. சுற்றுலா பயணிகளின் வருகை வீழ்ச்சிக்கு பல காரணிகளைக் கூறலாம்.

கோவாவின் கடற்கரையில் தங்களுக்கு சொந்தமான பகுதிகளை வேறு மாநிலத்தவருக்கு கோவா மக்கள் வாடகைக்கு விட்டுவிடுகின்றனர். இவ்வாறு, கோவா கடற்கரையில் வியாபாரம் செய்ய வருபவர்கள் வடாபாவ் விற்கின்றனர்; சிலர் இட்லியும்கூட விற்கின்றனர்.

இதனால்தான், கோவாவில் கடந்த 2 ஆண்டுகளாக சர்வதேச சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது’’ என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் சிக்கிய லாரி!

உதகைக்கு விரைந்த பேரிடர் மீட்புக் குழுவினர்!

இணையத் தொடராகும் ஏஜெண்ட் டீனா கதாபாத்திரம்!

ராமதாஸ் வீட்டில் செல்போன் ஹேக் செய்யப்பட்டதாக காவல்துறையில் புகார்!

வரைவு பட்டியல்: விடுபட்ட வாக்காளர்களுக்குத் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும்: தேஜஸ்வி!

SCROLL FOR NEXT