பகவந்த் மான்  
இந்தியா

பஞ்சாப்: அனைத்து பள்ளிகளிலும் பஞ்சாபி மொழிப் பாடம் கட்டாயம்!

பஞ்சாபில் தாய்மொழிப் பாடத்தை கட்டாயமாக்கி சுற்றறிக்கை...

DIN

பஞ்சாபில் வரும் கல்வி ஆண்டு முதல் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்பட அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை பஞ்சாபி மொழிப் பாடத்தை கட்டாயமாக்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாபில் அரசு-அரசு உதவி பெறும் பள்ளிகள், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), இந்திய இடைநிலைக் கல்வி சான்றிதழ் தோ்வு கவுன்சில் (ஐசிஎஸ்இ) மற்றும் பிற கல்வி வாரியங்களின்கீழ் செயல்படும் அனைத்துப் பள்ளிகளில் பஞ்சாபி மொழிப் பாடத்தை கட்டாயமாக்கும் வகையில், கடந்த 2008-இல் சட்டம் கொண்டுவரப்பட்டது.

ஆனால், அந்தச் சட்டத்தை அனைத்துப் பள்ளிகளும் முழு அளவில் பின்பற்றாத சூழலில், தற்போது ஆம் ஆத்மி அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில், “2008 ஆம் இயற்றப்பட்ட சட்டத்தின்படி அனைத்துப் பள்ளிகளிலும் பஞ்சாபி மொழிப் பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை அனைத்துப் பள்ளிகளும் பின்பற்ற வேண்டும். ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பஞ்சாபி மொழிப் பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு சான்றிதழ் வழங்கக் கூடாது. இதனை பின்பற்றாத பள்ளியின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

தேசிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை சர்ச்சையான நிலையில், தெலங்கானாவைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலமும் தாய் மொழியைக் கட்டாயப் பாடமாக கற்பிப்பதை உறுதி செய்ய வலியுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

போக்குவரத்து துண்டிப்பால் ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் பழங்குடி குழந்தைகள் தவிப்பு

மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

இளைஞா்களை ‘ரீல்ஸ்’-க்கு அடிமையாக்குவதே பிரதமரின் விருப்பம்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சபரிமலை: பூஜை, தங்குமிட முன்பதிவு இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT