திரிவேணி சங்கமம்(கோப்புப்படம்) ANI
இந்தியா

உ.பி. முழுவதும் கொண்டு செல்லப்படும் கும்பமேளா நீர்!

உத்தரப் பிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் கும்பமேளா நீர் எடுத்துச் செல்ல ஏற்பாடு...

DIN

மகா கும்பமேளாவில் பங்கேற்க முடியாத மக்களுக்காக மாநிலம் முழுவதும் புனித நீரைக் கொண்டு செல்வப்படும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஜன. 13 முதல் பிப். 26 வரை 45 நாள்கள் மகா கும்பமேளா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தில் 66 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் புனித நீராடினர்.

இந்த நிலையில், கும்பமேளாவில் கலந்துகொள்ள முடியாத உத்தரப் பிரதேச மக்களுக்காக 75 மாவட்டங்களுக்கும் திரிவேணி சங்கமத்தில் இருந்து புனித நீரைக் கொண்டு செல்ல முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

கும்பமேளாவுக்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட 365 தீயணைப்புத் துறையினரின் வாகனங்கள் மூலம் புனித நீர் கொண்டு செல்லப்படுகிறது.

கடந்த புதன்கிழமையுடன் கும்பமேளா முடிவடைந்த நிலையில், பல்வேறு பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வெள்ளிக்கிழமை திரும்பச் செல்கிறது.

இந்த வாகனங்கள் மூலம் திரிவேணி சங்கமத்தில் இருந்து புனித நீர் எடுத்துச் செல்லப்பட்டு, அந்தந்த மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெண்கலப் பதக்கம் வென்றது சாத்விக்/சிராஷ் இணை!

உலக தடகள சாம்பியன்ஷிப்: 19 பேருடன் இந்திய அணி

உலகப் பொருளாதாரத்தைச் சீண்டும் ‘டிரம்ப் வரி’!

கட்டுமானப் பொருள்கள் திருட்டு: இருவா் கைது

வா்த்தகம், முதலீடு விரிவாக்கம்: இந்தியா - சீனா முடிவு!

SCROLL FOR NEXT