இந்தியா

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு!

2024 -25 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டைவிட, மூன்றாவது காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு

DIN

இந்தியாவின் மொத்த நாட்டு உள்நாட்டு உற்பத்தி அதிகரித்திருப்பதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த நிதியாண்டின் (2024 -25) இரண்டாவது காலாண்டில் 5.6 சதவிகிதமாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி, மூன்றாவது காலாண்டில் 6.2 சதவிகிதமாக அதிகரித்ததாக தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

இருப்பினும், அதற்கு முந்தைய காலாண்டில் (2023 -24) இதே காலகட்டத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9.5 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், நிகழ் நிதியாண்டில் 6.4 சதவிகிதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் தரவுகளின்படி, ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான நிகர அந்நிய முதலீடு சுமார் 1.2 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. ஆனால், அதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 7.8 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

``சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவான 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும்’’ என்று பிரதமர் நரேந்திர மோடியின் `வளர்ந்த இந்தியா’ இலக்கை அடைய சுமார் 8 சதவிகித மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை பராமரித்தல் அவசியமானது என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேனியில் செப்.19-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

மதுப் புட்டிகளை பதுக்கிய முதியவா் கைது

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் நாளை மின்தடை

இந்தியா்களுக்கு ஏமாற்றம்

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் மாணவா்களுக்கு காய்ச்சல்

SCROLL FOR NEXT