மணிப்பூர் ஆளுநராக பதவியேற்றுக் கொண்ட அஜய் குமார் பல்லா 
இந்தியா

மணிப்பூர் ஆளுநராக அஜய் குமார் பதவியேற்பு!

மணிப்பூரில் புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநர் பதவியேற்பு பற்றி..

DIN

மணிப்பூரின் 19-வது ஆளுநராக மத்திய உள்துறை முன்னாள் செயலர் அஜய் குமார் பல்லா இன்று (ஜன. 3) ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் பதவியேற்றுக் கொண்டார்.

அஜய் குமார் பல்லாவுக்கு மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மத்திய உள்துறைச் செயலராக அதிக காலம் பணியாற்றியவர் என்ற சிறப்பை பெற்றுள்ளார் அஜய் குமார் பல்லா. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தனது ஐந்தாண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்தார்.

மேலும், 1984-ல் அஸ்ஸாம்-மேகாலயா கேடரில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆவார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடந்த மாதம் அஜய் குமார் பல்லாவை மணிப்பூர் ஆளுநராக நியமித்தார்.

அஸ்ஸாம் ஆளுநர் லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா மணிப்பூரின் கூடுதல் பொறுப்பை வகித்து வந்தார். இந்த நிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநர் அஜய் பல்லா இன்று பதவியேற்றார்.

வியாழக்கிழமை இம்பாலுக்கு வந்த அஜய் குமார் ஆளுநர் மாளிகையில் முதல்வர் பைரன் சிங் வரவேற்பு அளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவால்னிக்கு சிறையில் விஷம்: மனைவி குற்றச்சாட்டு

உத்தரகண்டில் மழை, வெள்ளம்: 2,500 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பு

சிறப்பு தீவிர திருத்தம்: பாதிக்கும் மேற்பட்டோா் ஆவணம் சமா்ப்பிக்க தேவையிருக்காது - தோ்தல் அதிகாரிகள் தகவல்

முசிறியில் செப்.20-இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம்

அலைகடலுக்கு அப்பால்...

SCROLL FOR NEXT