பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து கர்நாடகத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!
அரசுப் பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் பற்றி..
கர்நாடகத்தில் அரசுப் பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து பாஜகவினர் இன்று (ஜன. 3) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநிலத்தில் அரசுப் பேருந்து கட்டணத்தை 15 சதவீதம் உயர்த்த கர்நாடக அமைச்சரவை வியாழக்கிழமை முடிவு செய்தது. ஞாயிற்றுக்கிழமை முதல் இது அமலுக்கு வருகிறது. கட்டண உயர்வின் மூலம் அரசுக்கு மாதந்தோறும் ரூ.74.85 கோடியும், ஆண்டுக்கு ரூ.784 கோடியும் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மெஜஸ்டிக்கில் உள்ள கெம்பேககௌடா பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோகன் தலைமை வகித்தார்.
Advertisement
Advertisement
செய்தியாளர்களிடம் பேசிய அசோகன், ஏற்கனவே மாநிலத்தில் விலைவாசி உயர்வால் மக்கள் அவதிப்படுகின்றனர். இந்த நிலையில் பேருந்து கட்டண உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.
பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக தலைவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.