கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கோப்புப் படம்
இந்தியா

சீனாவில் பரவும் ஹெச்எம்பிவி தீநுண்மி குறித்து பீதி அடையத் தேவையில்லை: கேரள அமைச்சர்

சீனாவில் பரவும் ஹெச்எம்பிவி தீநுண்மி குறித்து பீதி அடையத் தேவையில்லை என்று கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

DIN

சீனாவில் பரவும் ஹெச்எம்பிவி தீநுண்மி குறித்து பீதி அடையத் தேவையில்லை என்று கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், சீனாவில் கண்டறியப்பட்ட எந்தவொரு வைரஸும் தொற்றுநோயாக மாறக்கூடிய அல்லது மற்ற பகுதிகளுக்கு வேகமாக பரவக்கூடியதாக இதுவரை எந்த அறிக்கையும் இல்லை.

இதுகுறித்து மாநில அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், தற்போது பீதி அடையத் தேவையில்லை.

மக்கள், குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் கூடுதல் விழிப்புடன் இருக்குமாறும், முகக்கவசம் அணியுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

தென்கொரியா: பாறை மீது மீன்பிடி படகு மோதியதில் 3 பேர் பலி

சீனாவில் ஹெச்எம்பிவி தீநுண்மி வேகமாக பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவே, இந்தியாவில் பருவகால ஃபுளூ காய்ச்சல் பாதிப்பு தொடா்ந்து உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதனிடயே ஹெச்எம்பிவி பரவலால் சீனாவில் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாக வெளியாகும் தகவலை அந்நாடு மறுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுக எம்.பி. சி.வி.சண்முகத்துக்கு எதிரான மகளிா் ஆணைய உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மனமகிழ் மன்றத்தை மூடக்கோரி உதவி ஆட்சியரிடம் தவெக மனு

பணி நிரந்தரம் கோரி தமிழகம் முழுவதும் செவிலியா்கள் தா்னா

திருவண்ணாமலை மலைப்பகுதி, நீா்நிலைகளை ஆக்கிரமிப்பாளா்களை உடனடியாக அப்புறப்படுத்த தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

SCROLL FOR NEXT