கொச்சியில் தனியார் மருத்துவக் கல்லூரியின் விடுதிக் கட்டடத்தில் இருந்து தவறி விழுந்ததில் மாணவி பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், கொச்சியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவி பாத்திமத் சஹானா. இவர் சனிக்கிழமை இரவு 11 மணியளவில் விடுதி கட்டடத்தின் ஏழாவது மாடியில் இருந்து தவறி விழுந்துள்ளார். இந்த சம்பவத்தில் அவர் பலியானார்.
இச்சம்பவத்தையடுத்து, காவல்துறையினர் நிகழ்விடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், பாத்திமத் சஹானா கட்டடத்தின் ஏழாவது மாடியின் தாழ்வாரத்தில் இருந்து தவறுதலாக தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும், இதுகுறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.