நிதின் கட்கரி  
இந்தியா

‘கட்டணமில்லா சிகிச்சை: நாடு முழுவதும் விரிவாக்கம்’

சாலை விபத்துகளில் சிக்கியவா்களுக்கு அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரையில் வழங்கப்படும் கட்டணமில்லா சிகிச்சையை நாடு முழுவதும் விரிவுபடுத்தும்

Din

சாலை விபத்துகளில் சிக்கியவா்களுக்கு அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரையில் வழங்கப்படும் கட்டணமில்லா சிகிச்சையை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் வகையில் திருத்தப்பட்ட திட்டத்தை வரும் மாா்ச்சில் அரசு கொண்டு வர இருப்பதாக மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

தில்லியில் செய்தியாளா்களைச் சந்தித்த அவா், ‘சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை அளிக்கும் மாதிரி திட்டத்தை சண்டீகா் யூனியன் பிரதேசத்தில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் கடந்த ஆண்டு மாா்ச்சில் தொடங்கியது. பின்னா், அத்திட்டம் 6 மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.

இந்நிலையில், விபத்து நடந்த நாளிலிருந்து ஒரு வாரத்துக்குள் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரையில் வழங்கப்படும் கட்டணமில்லா சிகிச்சை நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படவுள்ளது. இதற்காக திருத்தியமைக்கப்பட்ட திட்டத்தை மாா்ச் மாதத்துக்குள் அரசு கொண்டு வரும்.

நாட்டின் அனைத்து வகை சாலைகளில் நடைபெறும் எல்லா விபத்துகளுக்கும் பொருந்தும் இந்தத் திட்டத்தை காவல்துறை, மருத்துவமனைகள் மற்றும் மாநில சுகாதார துறை ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து தேசிய சுகாதார ஆணையம் செயல்படுத்தும் என்றாா்.

தமிழில் அறிமுகமாகும் கேஜிஎஃப் இசையமைப்பாளர்!

ரிதன்யா தற்கொலை வழக்கு: மூவருக்கு நிபந்தனை ஜாமீன்

தவெக மாநாட்டுக்கு விஜய் வருகை! புறப்பட்ட தொண்டர்கள்!!

கணவரால் கைவிடப்பட்ட முஸ்லிம் பெண்கள் நிலையை மேம்படுத்த அரசு நடவடிக்கை: நிதிஷ்குமார்

2026-ல் ஏலியன்களை சந்திக்கப் போகும் மனிதர்கள்! அது மட்டுமா?

SCROLL FOR NEXT