கோப்புப் படம் 
இந்தியா

சிபிஎம் நிர்வாகி கொலை வழக்கு: ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் 9 பேருக்கு ஆயுள் தண்டனை!

சிபிஎம் நிர்வாகி கொலை வழக்கில் 19 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

DIN

கேரளத்தில் 19 ஆண்டுகளுக்கு முன்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி கொல்லப்பட்ட வழக்கில் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கேரளத்தின் சுண்டா பகுதியைச் சேர்ந்தவர் ரிஜித் சங்கரன் (25). இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்) கட்சியின் நிர்வாகியாக இருந்தார். ஆர்எஸ்எஸ், சிபிஎம் இடையே அரசியல் பதற்றம் நிலவி வந்த நேரத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு அக்.3 அன்று ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களால் சுண்டா பகுதியிலுள்ள கோவிலின் அருகில் வைத்து ரிஜித் சங்கரன் கொல்லப்பட்டார்.

ரிஜித் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த நேரத்தில் கிணற்றுப் பகுதியில் ஆயுதங்களுடன் மறைந்திருந்த ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் திடீரெனத் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், ரிஜித்தின் நண்பர்கள் 3 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த வழக்கில், கடந்த ஜன. 4 அன்று கொலை செய்ததாகக் கருதப்படும் நபர்கள் அனைவரும் குற்றவாளிகள் என தலசேரி மாவட்ட கூடுதல் நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது.

10 பேர் குற்றம்சாட்டப்பட்டிருந்த நிலையில், ஒருவர் சாலை விபத்தில் இறந்துவிட்டார்.

குற்றவாளிகளான சுதாகரன் (57), ஜெயேஷ் (41), ரஞ்சித் (44), அஜீந்திரன் (51), ராஜேஷ் (46), ஸ்ரீ காந்த் (47), ஸ்ரீஜித் (43), பாஸ்கரன் (67) ஆகியோருக்கு கொலை, கொலை முயற்சி, கும்பலாக இணைந்து சட்டவிடோத நடவடிக்கையில் ஈடுபடுதல், கலவரம், ஆயுதங்களால் தாக்குதல் போன்ற பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

19 ஆண்டுகள் கழித்து இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விட்டாச்சு லீவு... அனுஷ்கா கௌசிக்!

உன்னைத் தேடி வருவேன்... நமீதா பிரமோத்!

பறக்கும்... நியதி பட்னானி!

வெள்ளை மாளிகையில் புதிய கட்டுப்பாடுகள்: முக்கிய பகுதிகளில் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு!

மறுவெளியீட்டுக்குத் தயாராகும் தேவர் மகன்!

SCROLL FOR NEXT