விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்.  
இந்தியா

குஜராத் விபத்துக்குக் காரணம் என்ன? தெரியும் வரை துருவ் ஹெலிகாப்டர்கள் பறக்கத் தடை

குஜராத் விபத்துக்குக் காரணம் தெரியும் வரை துருவ் ஹெலிகாப்டர்கள் பறக்கத் தடை விதிப்பு

DIN

துருவ் மேம்படுத்தப்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்கள் அனைத்தும் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் தெரிவித்திருக்கிறது.

அதிநவீன இரட்டை என்ஜின் கொண்ட இலகுரக ஹெலிகாப்டர், கடந்த 5ஆம் தேதி குஜராத் மாநிலம் போர்பந்தரில் விழுந்து நொறுங்கி விபத்து நேரிட்ட சம்பவத்துக்குக் காரணம் என்ன என்று அறியப்படும்வரை, துருவ் ஹெலிகாப்டர்களை இயக்க வேண்டாம் என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் பாதுகாப்புப் படையில் இணைந்த துருவ் ஹெலிகாப்டர், 5.5 டன் எடையுள்ளது, இது 200 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது விமானியின் கட்டுப்பாட்டை இழந்து தலைக்குப்புற விழுந்து நொறுங்கி, விழுந்த வேகத்தில் தீப்பற்றி எரிந்தத.

இந்த சம்பவத்தில் ஹெலிகாப்டரில் இருந்த மூன்று பேர் பலியாகினர். இதையடுத்து அனைத்து துரவ் வகை ஹெலிகாப்டர்களும் தரையிறக்கப்பட்டுள்ளன. கடந்த 2023ஆம் ஆணடு மிகப்பெரிய நான்கு விபத்துகள் நேரிட்ட நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதில்லாமல், கடந்த சில மாதங்களில் மட்டும் மின்சாரம் துண்டிப்பு, கியர் பெட்டி செயலிழப்பு போன்றவை நேரிட்டதாகவும் அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.

கடலோரக் காவல் படையின் விசாரணையும் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஹெலிகாப்டரில் இருக்கும் பிரச்னை என்ன, விபத்துக்கான காரணம் என்ன என்பது பற்றி ஆய்வு செய்து உண்மை நிலவரம் அறிந்த பிறகே துருவ் ஹெலிகாப்டர்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆந்திர மக்களுக்குப் புத்தாண்டு பரிசை அறிவித்த முதல்வர்!

டிமான்டி காலனி - 3 அப்டேட்!

திருப்பரங்குன்றம் விவகாரம்: சிவன் பார்த்துக் கொள்வார்! மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

ஆண்டின் இறுதி நாள் வணிகம் உயர்வுடன் தொடக்கம்!

SCROLL FOR NEXT