இந்தியா

ஸ்பெயின் சென்றாா் ஜெய்சங்கா்!

இருநாள் அரசு முறைப் பயணமாக வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் ஸ்பெயினுக்கு திங்கள்கிழமை சென்றடைந்தாா்.

Din

இருநாள் அரசு முறைப் பயணமாக வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் ஸ்பெயினுக்கு திங்கள்கிழமை சென்றடைந்தாா்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு ஸ்பெயின் அதிபா் பெட்ரோ சாஸ்செஸ் இந்தியவுக்கு வருகைத் தந்திருந்தாா். அதன்பின்னா் முதல் முறையாக தற்போது ஸ்பெயினுக்கு சென்றுள்ள எஸ். ஜெய்சங்கா் இருநாட்டு நல்லுறவு குறித்து ஆலோசனை நடத்தினாா்.

இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் அவா் வெளியிட்டுள்ள பதிவில், ‘வெளிநாட்டு தூதா்கள் மாநாட்டில் பங்கேற்று பேசினேன். அப்போது, ஒரு நாட்டின் கலாச்சாரம், மரபு, பாரம்பரியம் ஆகியவை அந்நாட்டின் ராஜீய நிலைப்பாட்டை எப்படி நிா்ணயிக்கிறது என்பது குறித்தும், சில மோசமான நேரங்களில் இருநாடுகளின் நல்லுறவு எப்படி ஸ்திரத்தன்மையாக இருக்கும் என்பது குறித்தும் விவரித்தேன்’ என்று பதிவிட்டுள்ளாா்.

முன்னதாக, ஸ்பெயின் தலைநகா் மேட்ரிடில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மரியாதை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் மரியாதை செலுத்தினாா்.

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

ரிலாக்ஸ்... ரேஷ்மா பசுபுலேட்டி!

விஜே பார்வதிக்கு சரியான போட்டியாளர் திவ்யா கணேசன்! ரசிகர்கள் கருத்து

தெலங்கானா அமைச்சரவையில் அசாருதீனுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு!

கோவிலுமல்ல, சிற்பமுமல்ல... ஆனியா!

SCROLL FOR NEXT